திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பரிதி புறம் முனுசாமி தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் வயத ( 57) இவர் செய்யார் அடுத்த வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி இருபத்தி நான்கு வயதில் ஒரு மகனும் 20 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர் பணி புரியும் தொடக்கப்பள்ளியில் குறைந்த அளவே மாணவ- மாணவியர் பயில்கின்றனர். இதனால் இந்த அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் மட்டுமே ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் எடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் தலைமையாசிரியர் ராமலிங்கம் வழக்கம்போல மாணவர்களுக்கு பாடங்களை எடுத்து வந்து கொண்டிருந்தார் அப்போது 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது மதிக்கத்தக்க மாணவியைக் அதே பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் கடந்த 9-ந்தேதி மாணவியை மட்டும் தனியாக அழைத்து அருகிலுள்ள வகுப்பறைக்கு கூட்டி சென்றுள்ளார்.


 


 




 


அப்போது தனியாக இருந்த மாணவியை பள்ளியின் தலைமையாசிரியர் ராமலிங்கம் மாணவியின் ஆடைகளை களைத்துவிட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் ரீதியான சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் தலைமையாசிரியர் இங்கு நடந்த சம்பவத்தைப் பற்றி வெளியில் யாரிடமும் சொன்னாலோ அல்லது உங்கள் பெற்றோரிடம் கூறினால் உன்னை கொன்றுவிடுவேன் என மாணவியை பயமுறுத்தி உள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்ற மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை தாயாரிடம் கூறி, இனிமேல் நான் பள்ளிக்குச் செல்ல மாட்டேன், எனத் தெரிவித்து கண்ணீர் விட்டு கதறி அழுததாகத் தெரிகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் தனது கணவரிடம் உடனடியாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து 20-ந்தேதி சிறுமியின் தந்தை பள்ளிக்குச் சென்று, தலைமை ஆசிரியரான ராமலிங்கத்திடம் கேட்டுள்ளார். இதன் பின்னர் இதுதொடர்பாக பெற்றோர்கள் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது ஆய்வாளர் நந்தினிதேவி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராமலிங்கத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 




 


 


அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறைச் சேர்ந்தவர் முருகன் வயது (33) இவர் கார் டிரைவர்.இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.இவர், 16 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, அடிக்கடி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் அம்மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற போது, மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இது குறித்து, அவரது தாய் அளித்த புகாரில், செய்யாறு அனைத்து மகளிர் காவல்துறையினர், முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.தலைமை ஆசிரியரே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதி பெற்றோர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது