தனது பார்ட்னர் அப்தாப் பூனாவாலாவால் கழுத்து நெரித்து உடல் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வால்கர் டெல்லியில் அவருடன் குடியேறுவதற்குச் சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிராவில் உள்ள வாசாய் பகுதியில் அவருடன் வசித்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள போலீசில் தனக்கு நிகழும் கொடுமை குறித்து அவர் போலீஸில் புகார் அளித்ததாகத் தெரிய வந்துள்ளது. 


போலீசார் புகார்: 


அவர்கள் இருவரும் மும்பையில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் அப்தாப் தன்னை அடித்த பிறகு அவர் போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்துப் பகிர்ந்துள்ள டெல்லி போலீஸ் அவரை அஃப்தாப் கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தது அப்தாப்பின் பெற்றோருக்கும் தெரியும் என்று கூறியுள்ளனர். இந்த குற்றப் புகாரையும், வசாய் போலீசார் எடுத்த நடவடிக்கையையும் போலீசார் தற்போது சரிபார்த்து வருகின்றனர்.இதற்கிடையே அஃப்தாபின் பெற்றோர் டெல்லியில் வாக்குமூலம் பதிவு செய்து உள்ளனர். மேலும் அது தொடரலாம் என போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 


ஷ்ரத்தா வால்கர் தனக்கு நிகழும் கொடுமை குறித்து தன்னுடைய சக ஊழியர் ஒருவருக்கு வாட்சப் அனுப்பியதும் தற்போது இதில் சாட்சியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. தனது சக ஊழியரான கரணுக்கு அவர் வாட்சப்பில் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவர் பகிர்ந்ததை அடுத்து அவரது வாக்குமூலமும் தற்போது சாட்சியமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.




 


ஷ்ரத்தா வாக்கர் கொலை வழக்கில் விசாரணை நடந்து வரும் நிலையில், நடுங்கவைக்கும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வந்துள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், 28 வயதான ஆப்தாப் அமின் பூனாவாலா, தனது துணையான ஷ்ரத்தாவை தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள தனது இல்லத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றபிறகு, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்ட 10 மணி நேரம் எடுத்துக்கொண்டுள்ளார். உடலை துண்டு துண்டாக வெட்டுவதற்கு இடையில் பிரேக் எடுத்து பீர் குடித்தார் என்றும், சிகரெட் புகைத்தார் என்றும், நெட்ஃபிளிக்ஸில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தார் என்றும், மேலும் Zomatoவில் உணவை ஆர்டர் செய்து உண்டார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.


35 துண்டுகள்:


அஃப்தாப் ஆன்லைன் டேட்டிங் மூலம் ஷ்ரத்தா வாக்கரை சந்தித்துள்ளார். பின்னர், மும்பையில் உள்ள கால் சென்டரில் பணிபுரிய ஆரம்பித்த இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தினர் இந்த உறவை எதிர்த்தனர், அதனால் இந்த ஜோடி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மெஹ்ராலிக்கு சென்று ஒன்றாக வாழ்ந்து வந்தது.


பூனாவாலா கடந்த மே மாதம் வால்கரை கழுத்தை நெரித்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டியதாகக் கூறப்படுகிறது, அதை அவர் மெஹ்ராலியில் உள்ள அவரது வீட்டில் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ளார். 


இதற்கிடையே “ இன்று அவர் என்னை மூச்சுத்திணறக் கொல்ல முயன்றார். அவர் என்னைப் பயமுறுத்துகிறார்.என்னைக் கொன்று, துண்டு துண்டாக வெட்டி எறிந்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவர் என்னை ஆறு மாதங்களாக அடிக்கிறார் ஆனால் அவர் என்னைக் கொன்று விடுவேன் என மிரட்டுவதால் எனக்குப் போலீஸிடம் சென்று புகார் அளிக்க இத்தனை நாளாக தைரியம் இல்லை” என்று அவர் மும்பை போலீசுக்கு அளித்த புகாரில் குறிப்பிட்டு இருப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த புகாரை 2020ம் ஆண்டே ஷ்ரத்தா காவல்துறையில் அளித்தது குறிப்பிடத்தக்கது.