தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கழுகுமலை துலுக்கர்பட்டியை சேர்ந்த திருநங்கை மகேஷ், இவருடைய தோழி தென்காசி மாவட்டம் கே.ஆலங்குளத்தினை சேர்ந்த அனன்யா. இவரும் திருநங்கை. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 7-ஆம் தேதி அன்று துலுக்கர்பட்டியில் இருந்து கெச்சிலாபுரத்திற்கு இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது கழுகுமலை ஆறுமுகம் நகர் பகுதியை சேர்ந்த நோவாயுவான் மற்றும் சங்கரன்கோவிலை சேர்ந்த விஜய் இருவரும் வழிமறித்து திருநங்கைகளை கடத்தி சென்று கெச்சிலாபுரத்தில் உள்ள காட்டுபகுதியில் வைத்து தாக்கியுள்ளனர்.

 

மேலும் அனன்யாவின் முடியை அறுத்துள்ளனர். அதை வீடியோ எடுத்தது மட்டுமின்றி வெளியே சொல்லக்கூடாது என்று நோவாயுவான், விஜய் கூறியதாக கூறப்படுகிறது.



 

இதில் காயமடைந்த அனன்யா, மகேஷ் இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளனர். நோவாயுவான், விஜய் இருவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து இந்த ஊரில் இருக்ககூடாது என்று திருநங்கைகளை அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையெடுத்து 2 திருநங்கைகளும் அங்கிருந்து யாரிடமும் சொல்லமல் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் 2 திருநங்கைகள் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை சமூக செயற்பாட்டாளர் கிரேஸ்பானு என்பவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்தது மட்டுமின்றி, நோவாயுவான், விஜய் இருவரும் கழுகுமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது மட்டுமின்றி 2 பேரையும் கைது செய்துள்ளனர்.



இது குறித்து கிரேஸ்பானு திருநங்கைகள் தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தவுடன், தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் அவர்களை தொடர்பு கொண்டு போது “இரு திருநங்கைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்படுவர்கள்” என்று உறுதியளித்தாரம். இந்நிலையில் அனன்யா , மகேஷ் இருவரையும் தாக்கி வீடியோ வெளியிட்ட விவகாரம் விஜய்(23), நோவாயுவான் (19) ஆகிய இருவரை கழுகுமலை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆபாசமாக பேசுதல், கொலைமிரட்டல் விடுத்தல், திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.







 

இது குறித்து தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்கிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம்..,”இந்த பிரச்னை தொடர்பாக இரண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பான முழு விபரங்கள் விசாரணைக்கு பின்பு தருகிறேன்” என்றார்.