குஜராத்தில் வருமானவரித் துறையினர் ரெய்டுக்குச் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அதிகாரிகள், காவலர்கள் என மொத்தம் 11 பேர் காயமடைந்தனர். 


குஜராத் மாநில சுரேந்திராநகர் மாவட்டத்தில் நேற்று வருமானவரித் துறை அதிகாரிகள் 6 பேர் உட்பட 11 பேர் ஐடி ரெய்டுக்காகப் புறப்பட்டனர். இந்தக் குழுவில் அகமதாபாத் காவல்துறையைச் சேர்ந்த 5 காவலர்களும் இருந்தனர். ராஜ்கோட் நகரில் பல்வேறு இடங்களிலும் ரெய்டு நடத்துவதற்காக அந்தக் குழுவினர் புறப்பட்டனர்.


அப்போது வாகனம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஸ்கிட் ஆனது. இதில் வாகனத்தில் இருந்து அனைவரும் கீழே விழுந்தனர். 11 பேருக்குமே காயம் ஏற்பட்டது. இரண்டு ஆண்கள், இரண்டு பெண்களுக்கு எலும்புமுறிவு ஏற்பட்டது. இருப்பினும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று சுரேந்திராநகர் காவல் கண்காணிப்பாளர் மகேந்திர பகாரியா தெரிவித்தார்.
விபத்து சோமாசர் கிராமத்தின் அருகில் காலை 4.30 மணியளவில் விபத்து நடந்துள்ளது. 


காயமடைந்தவர்கள் ராஜ்குமார் குப்தா, அமித் குப்தா, ஓஜாஸ் பரீக், ரோஹித் தாக்கர், உமா ஷங்கர் பிரசாத், செஜால் தோதியா, ஷ்ரத்தா நாகாபாய், கோமல், வாலாபாய், அஸ்மிதா கர்சான்பாய் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.