திருமண வாழ்க்கையில் தம்பதிகள் இடையே பல்வேறு பிரச்சினைகள் வருவது வழக்கம். அந்தப் பிரச்சினைகள் ஒரு சில நேரங்களில் முற்றினால் தற்கொலை, கொலை வரை செல்லும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட சிறிய வாக்குவாதம் காரணமாக மனைவி தன்னுடைய மகனை கொலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 


குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியைச் சேர்ந்தவர் துஷார் சவாலியா. இவருக்கு காஜல்(30) என்ற மனைவி மற்றும் ஜிவ்யா என்ற மகனும் உள்ளனர். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாக காஜல் பல் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக தன்னுடைய கணவர் துஷாரிடம் அவர் பல முறை கூறியுள்ளதாக தெரிகிறது.


எனினும் துஷார் தன்னுடைய வயல் வேலையில் இருந்ததால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இதன்காரணமாக கடும் மன உளைச்சலில் காஜல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று துஷார் தன்னுடைய பெற்றோருடன் பக்கத்து ஊருக்கு ஒரு நிகழ்ச்சிகாக சென்றுள்ளார். அந்த சமயத்தில் காஜல் தன்னுடைய மகனுக்கு உணவில் விஷயம் வைத்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. அதன்பின்னர் அந்த விஷயத்துடன் சமைத்த உணவை அவரும் சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


இதைத் தொடர்ந்து காஜல் மற்றும் அவருடைய மகன் ஜிவ்யா ஆகிய இருவரும் வீட்டிற்குள் உயிரிழந்துள்ளனர். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்த துஷார் நீண்ட நேரம் தட்டியும் யாரும் கதவை திறக்கவில்லை. அதன்பின்னர் சந்தேகம் அடைந்து துஷார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது மனைவி காஜல் மற்றும் அவருடைய மகன் ஜிவ்யா சுய நினைவை இழந்து கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு துஷார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் துஷார் குடும்பமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கணவர் தன்னை பல் மருத்துவரிடம் அழைத்து செல்லவில்லை என்பதற்காக குழந்தையை கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 




மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண