சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கஞ்சியூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் அருண். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி மகள் கௌசல்யாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் அருண் கௌசல்யா தம்பதிக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தாய், தந்தையை பிரிந்து காதல் திருமணம் செய்து கொண்ட கௌசல்யா தனக்கு குழந்தை பிறந்த நிலையிலும் கூட தாய் தந்தை வந்து பார்க்காததால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.



இந்த நிலையில் அருண் வேலைக்கு சென்ற நிலையில் தனியாக இருந்த கௌசல்யா தன் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தொடர்ந்து அழுத நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, குழந்தை தொட்டிலிலும் தூங்கிக் கொண்டிருந்தபோது கௌசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து உடனடியாக கௌசல்யாவின் கணவர் அருணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 



தகவல் எடுத்து வீட்டுக்கு வந்த அருண், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையிலும் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பூலாம்பட்டி காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து அருண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கௌசல்யாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் தாய் மற்றும் தந்தை பார்க்காத விரக்தியின் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)