செங்கல்பட்டு அருகே உள்ள திருமனி இந்திரா நகர் பகுதியில் கூலித்தொழிலாளி தம்பதியின் 16 வயது சிறுமி, செங்கல்பட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். திருமனி இந்திராநகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முனியாண்டி மகன் ராபின்(22), திமுக இளைஞரணி நிர்வாகியாக உள்ளார்.



அதே பகுதியில் பால் கடை நடத்தி வரும் ராபின், கடந்த ஒரு வருடமாக சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தகவல் தெரிந்து  கொதித்துப் போன சிறுமியின் பெற்றோர், செங்கல்பட்டு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜாமணியிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் ராபினை கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  சிறையில் அடைத்தனர்.