கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா மாநிலத்தில் பஞ்சம் என்ற பேச்சிற்கு இடமில்லை. ஆனால் வரதட்சணை கொடுமை மட்டும், அங்கே சற்று அதிகமாக உள்ளது.  அம்மாநிலத்தில் வரிசையாக விஸ்மயா, அர்ச்சனா,  ஆதிரா, சுசித்ரா உள்ளிட்ட 7 பெண்கள் தொடர்சியாக வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழந்தனர். 


இந்தவரிசையில் தற்போது, சுனிஷா என்ற இளம் பெண் இணைந்துள்ளார். கன்னூர் மாவட்டம் பையனூரை சேர்ந்தவர் விஜீஷ். இவருக்கும் சுனிஷாவுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பெரியவர்கள் திருமணம் செய்து வைத்தனர்.  


திருமணம் நடந்து, முடிந்த நாள் முதல், கணவர் வீட்டில் பல்வேறு பிரச்னைகள், கொடுமைகளை சுனிஷா அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. 


தன்னுடைய கணவர் தன்னை தாக்கி சித்திரவாதை செய்வதாக பல முறை அந்த பெண், உறவினர்களை அழைத்து கூறியுள்ளார். ஆனால் அவர்களோ வழக்கம் போல் கணவன், மனைவி தகாராறு என எண்ணிக் கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர். 


அவரது கணவர் மட்டுமின்றி, மாமியாரும் சுனிதாவை தாக்கி உள்ளார். அவரது முடியை,   இழுத்து தாக்கியதோடு, கடுமையான வார்த்தைகளால், சுனிதா மனது பாதிக்கும் அளவிற்கு திட்டித் தீர்த்துள்ளார். 


இப்படி தொடர்சியாக கொடுமையகள் அணுபவித்து வந்த சுனிஷா சமீபத்தில் வீட்டின் பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.


இந்நிலையில் சுனிஷா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது சகோதரனுக்கு தான் அனுபவித்த கொடுமைகள் குறித்து ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு உயிரிழந்தார்.  


அதில், “உங்களால்  முடிந்தால் என்னை தயவு செய்து தற்போதே வந்து காப்பாற்றி அழைத்துச் சென்றுவிடுங்கள்.  நான் உங்களுடன் வரத் தயாராக இருக்கிறேன். என் கணவரும், அவரது தாயாரும் என்னை அடித்து துன்புறுத்துக்கின்றனர்.


இந்த பதிவு பேசும் நான் இரவு உயிரோடு தான் இருப்பேனா என்பது கூட தெரியவில்லை” என பேசியுள்ளார். அவர் மனதளவில் எவ்வளவு வலி அனுபவித்து இருக்கிறார் என அதில், தெரியவருகிறது. 


இந்த சம்பவம் குறித்து சுனிஷாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், "கணவர் மட்டும் இல்லாமல் மாமியா, மாமனார் என குடும்பமே வரதட்சணை காரணமாக அவரை துன்புறுத்தினார். அங்கு நடைபெறும் கொடுமை எங்களிடம் தெரிவிப்பதால், அவரது செல்போனை வாங்கி உடைத்து விட்டனர்.  அவர் உணவு கூட வீட்டில் உண்ணாமல், வெளியே கடையில் வாங்கி அருந்தினார்.  நாங்கள் சென்று அவரை அழைத்து வர முயன்ற போது அவரது கணவர், எங்களுடன் அனுப்பி வைக்கவில்லை. இது குறித்து பல முறை காவல் துறையினரிடம் புகார் அளித்து இருக்கிறேம். ஆனால் அவர்கள் மாப்பிள்ளை வீட்டில், அரசியல் பின் பலம் இருந்ததால் நடவடிக்கை எடுக்க வில்லை” என தெரிவித்தார். 


சுனிஷா பேசிய ஆடியோ வெளியானதால் தற்போது காவலர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்,