திருமண வாழ்க்கையில் ஒரு சில நேரங்களில்  தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் சந்தேகங்கள் குற்றச் செயல் வரை சென்றுவிடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தற்போது நடைபெற்று உள்ளது. அதில் அழகாக இருக்கும் மனைவி மீது எழுந்த சந்தேகத்தின் காரணமாக கணவர் அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ஜெர்மனியின் ரைன் பகுதியில் பெட்ரிக்(27) என்ற நபர் தன்னுடைய மனைவி ஜெனிஃபர்(27) உடன் வசித்து வந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு 5 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் பெட்ரிக் தன்னுடைய மனைவி ஜெனிஃபரை கத்தியை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போதும் இவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என்று மனைவி ஜெனிஃபர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. 




இதன் காரணமாக காவல்துறையினர் இவரை எச்சரித்து விட்டுள்ளனர். எனினும் அதன்பின்பும் மனைவி ஜெனிஃபர் மீது இவருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. அத்துடன் அவருடன் தொடர்ந்து சண்டை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி பெட்ரிக் தன்னுடைய மனைவியுடன் நடைபெற்ற சண்டையில் அவரை கொலை செய்துள்ளார். மேலும் அவர் தன்னுடைய மனைவியை தேடி வந்துள்ளார். இதுகுறித்து அவர் காவல்துறையினருக்கு ஒரு புகாரும் கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய மனைவி மாலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்று திரும்பிய போது காணவில்லை என்று கூறியுள்ளார். 


அவர் அளித்தப் புகாரின் பெயரில் காவல்துறையினர் தேடி வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய வீட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் இருக்கும் புதர்களிலிருந்து அவருடைய மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அந்த சடலத்தை உடற்கூறு ஆய்வு செய்த போது அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து கணவர் பெட்ரிக் இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நான் மனைவியை கொலை செய்யவில்லை என்று முதலில் பெட்ரிக் திட்டவட்டமாக கூறியுள்ளார். 


அதன்பின்னர் காவல்துறையினர் அவருடைய மனைவியின் மொபைல் போனை ஆய்வு செய்துள்ளனர். அந்த சமயத்தில் பெட்ரிக்கின் மனைவி கொலை செய்யப்பட்ட நேரத்திற்கு பிறகு தன்னுடைய சகோதரிக்கு ஜெனிஃபர் குறுஞ்செய்தி அனுப்பியது போல் பெட்ரிக் செய்ததை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அதைவைத்து காவல்துறையினர் பெட்ரிக் இடம் விசாரணை நடத்திய போது அவர் கொலை செய்த உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெட்ரிக் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண