திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி பகுதியில் சேவூர் செல்லக்கூடிய சாலையில் கூட்டுறவு நகர வங்கி கிளை இயங்கி வருகின்றது. இதில் வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பாவும் நகை மதிப்பீட்டாளராக மோகன் என்பவர் உள்ளிட்டோர் என சுமார் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சட்டமன்ற தேர்தலில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்யபடுவதாக இரு கட்டியனரும் அறிவித்தன. இந்நிலையில் நகை மதிப்பீட்டாளர் மோகன் மற்றும் வங்கி தலைவர் அதிமுகவைச் சேர்ந்த அசோக் குமாருடன் இணைந்து கூட்டுறவு வங்கியில் இருந்து நூதன முறையில் சுமார் 8.4 கிலோ தங்கநகையை இதன் மதிப்பு சுமார் 2கோடியே 39 லட்சம் ரூபாய்குறிய போலி நகையை வைத்து கொள்ளையடித்துள்ளனர்.



இந்த சம்பவம் தொடர்பாக வேலூர் கூட்டுறவு மண்டல அதிகாரிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரணி கிளை வங்கியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த வங்கியில் போலியாக நகை வைத்தது கொள்ளையடித்தது தெரியவந்தன. இதனையொடுத்து செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் மற்றும் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவிற்கு அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கூட்டுறவு வங்கி மண்டல இணை பதிவாளர் ராஜ்குமார் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன் மற்றும் கிளார்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 நபர்களையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் அதிமுக கட்சியை சார்ந்த அசோக்குமார் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.




மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர் அதிமுகவை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார் துணை தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகிய 2 நபர்களிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டன. அதன் அடிப்படையில் தற்பொழுது திருவண்ணாமலை வணிக குற்றப்பிரிவு புலனாய்வு துறை அதிகாரிகள் ஆரணி அதிமுக நகர செயலாளரும் வங்கியின் முன்னாள் தலைவருமான அசோக்குமார் வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் காசாளர் ஜெகதீசன் நகை மதிப்பீட்டாளர் மோகன் உள்ளிட்ட 4 நபர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இதனையடுத்து திருவண்ணாமலை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு நான்கு நபர்களையும் ஆஜர்படுத்தி அவர்களை குற்றப்பிரிவு புலனாய்வு துறையினர் சிறையில் அடைக்க உள்ளனர்.மேலும் இந்த சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது