வலிமை படத்தில் நாங்கள் நினைத்ததில் 50 சதவீதத்தை மட்டுமே எடுக்க முடிந்தது என ஹெச். வினோத் பேசியிருக்கிறார். 


அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேசியிருக்கும் ஹெச்.வினோத் வலிமை படப்பிடிப்பின் போது நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டதாக சொல்லியிருக்கிறார்.  “ வலிமையில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தது. நாங்கள் எடுக்க நினைத்த படத்தில் 50 சதவீதம் கிட்ட மாற்றங்கள் செய்ய வேண்டியதாயிற்று. முதலில் அம்மா கேரக்டருக்கு வேறு ஒருவரை கமிட் செய்திருந்தோம். ஆனால் அவர்கள்  வராத நிலையில், வேறு ஒருவரை கமிட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். இடையே படத்தில் நடித்த ஒரு நடிகரும் இறந்துவிட்டார்.


படத்தில் நடித்த சில கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் சிலர் டாக்டர்கள் பரிந்துரையின் படி நடிக்க முடியாமால் போனது. கொரோனாவுக்கு முன்னால் ஒல்லியாக சென்றவர்கள் குண்டாக வந்தார்கள், குண்டாக சென்றவர்கள் ஒல்லியாக வந்தார்கள். கல்யாணம் ஆகிருந்தவங்களுக்கு குழந்தை பிறந்து விட்டது. இப்படியான மாற்றங்கள் படத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்துவிட்டது” என்றார். 




அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான அன்றைய நாள், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படத்தை பெரும்பான்மையான திரைப்பட விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். சிலர் அஜித்தை தனிமனித தாக்குதலுக்கும் உட்படுத்தினர்.


 






ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தை பார்த்த பலர் படம் நன்றாகவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் பெரும்பான்மையான காட்சிகள், பைக் ஸ்டண்ட் சார்ந்தவை என்பதால், டூப் இல்லாமல் அஜித் ரிஸ்க் எடுத்து அந்த ஸ்டண்டுகளில் நடித்திருந்தார். இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது அஜித்திற்கு பலமுறை காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேசினார். 


Also Read | Maaran Review: மாறன் படத்தை மாறி மாறி பார்க்க முடியுமா? தனுஷ் படத்தில் இது ஒரு தினுசு... சுடச்சுட சுட்டிக்காட்டும் விமர்சனம் இதோ!