அபியும் நானும் சீரியலில் முகிலாக நடித்துவரும் நித்திஷ் என்ற 7 வயது சிறுவன் 60 கார்டூன் கதாபாத்திரங்களின் பெயர்களை 60 நொடியில் வேகமாகக் கூறி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். இவர்க்கு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.


குழந்தைகளின் திறமைக்குக் கொஞ்சம் தோள் கொடுத்தால் போதும், வாழ்வில் பல சிகரங்களை எளிதில் தொட்டுவரக்கூடிய அசாத்திய சக்தி அவர்களிடம் உள்ளது. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகியிருக்கிறார் சன்டிவியின் அபியும் நானும் சீரியலில் முகில் ரோலில் நடித்துவரும் 7 வயது நித்திஷ். சீரியலில் குழந்தை நட்சத்திரம் மட்டுமில்லாது மிமிக்ரி, மைமிங் காமெடி என போன்றவற்றில் பட்டையைக்கிளப்பும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதோடு பார்ப்பதற்கு பப்லி இருக்கும் இவர் சீரியலில் செய்யும் சேட்டைகள் அனைத்தும் மிகவும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கும். நித்திஷ் அவ்வப்போது சின்னத்திரை நடிகர், நடிகைகளுடன் இன்ஸ்டா ரீல்ஸ்களும் செய்துவரும் நிலையில், சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.





இந்நிலையில் தான், 7 வயது சிறுவனான நித்திஷ் தற்போது கின்னஸ் சாதனை செய்ததோடு பலரின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் பெற்றுள்ளார். அப்படி என்ன செய்தார் தெரியுமா? குழந்தைகள் என்றாலே அதிகமாக கார்டூன் சேனல்கள் தான் பார்ப்பார்கள். இதற்கு பல பெற்றோர்கள் இன்னமும் குழந்தைகளை திட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.ஆனால் அபியும் நானும் நித்திஷ் தற்போது கின்னஸ் சாதனை பெற்றுள்ளதற்கு கார்டூன் கதாபாத்திரம் தான் உதவியுள்ளது. ஆம். நித்திஷ் 60 வினாடிகளில் 60 கார்டூன் கதாபாத்திரங்களின் பெயரை வேகமாக கூறி உலக கின்னஸ் புத்தகத்தில்  இடம் பிடித்து இருக்கிறார். இச்செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகிவரும் நிலையில் சின்னத்திரை மற்றும் வெள்ளத்திரை பிரபலங்கள், நித்திஷின் ரசிர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.


இந்நிழ்வு குறித்து கருத்துக்களைப்பகிர்ந்த நித்திஷின் அப்பா, கின்னஸ் சாதனைப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும், இதற்கு முன்னதாக 52 கார்டூன் பெயர்களைக் குறிப்பிட்டவர் தான் கின்னஸ் சாதனை பெற்றார் எனவும் தெரிவித்துள்ளார்.


 






மேலும் இந்த உலக சாதனைக்குறித்து நித்திஷ் பேசுகையில், எனக்கு ஸ்பைடர் மேன் கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மார்வெல் காமிக் கதாபாத்திரங்களை முயற்சிக்க நினைத்தேன் எனவும் ஆனால் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் டிசி காமிக்ஸ் முயற்சிக்க கூறினார்கள். எனவே நான் அந்த சவாலை கையில் எடுத்தேன் எனவும் சாதனையை நிகழ்த்த ஒரு மாதம் நான் தயார் செய்தேன் எனக்கூறியுள்ளார். இதோடு ஆரம்பத்தில் அனைத்தும் குழப்பமாக இருந்தது. ஆனால் முயற்சியைக் கைவிடவில்லை. இதனையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன். இதனால் தான் இந்த சாதனையை என்னால் முடிக்க முடிந்தது என மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.