கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் வட மாநில தொழிலாளர்களை ஸ்கார்பியோ காரில் வந்து மிரட்டி வழிபறி செய்த நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (20) என்பவர் பணி புரிந்து வருகிறார்.  இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் மளிகைக் கடையில் ரகுமான் தனது நண்பர்கள் இருவருடன் பொருட்கள் வாங்கிக் கொண்டு கணியூர், மாதப்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சரண்குமார் (26),  கோகுலகிருஷ்ணன் (26), மற்றும் ஊத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (20) கொள்ளுபாளையம் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (28) ஆகிய நான்கு பேரும் ஸ்கார்பியோ காரில் வந்து அவர்கள் மூவரையும் வழி மறித்து மிரட்டியுள்ளனர். 


அப்போது அவர்களிடம் இருந்த நான்காயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு 4 பேரும் காரில் சென்று விட்டனர். இதனைத் தொடர்ந்து 4 பேர் ஸ்கார்பியோ காரில் வந்து வழிப்பறி செய்து சென்றதாக அப்துல் ரகுமான் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அலித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நான்கு பேரும் கணியூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பதுங்கி இருந்த நான்கு பேரையும் கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கலைச்செல்வன் என்ற நபர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண