விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 சிறுவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இளைஞர்கள் நீதி குழும நீதிபதி மருதுபாண்டியன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். கைதான 8 பேர்களில் நான்கு பேர் சிறார்கள் என்பதால் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்தனர்.


முன்னதாக, விருதுநகர் மாவட்டம் பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது பெண்மணி ஒருவர் அதே பகுதியில் உள்ள கார்மெண்ட்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விருதுநகர் மேல தெருவை சேர்ந்த திமுக நிர்வாகி ஹரிஹரன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். பால் பண்ணை நடத்தி வரும் ஹரிஹரன் அந்த பெண்ணை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஏமாற்றி உடலுறுவு கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு தெரியாமல் தனிமையில் இருக்கும் வீடியோவை பதிவு செய்த ஹரிஹரன், தனது நண்பரான திமுக நிர்வாகி ஜுனைத் அகமதுவிற்கு அனுப்பியுள்ளார். 


அதை தொடர்ந்து அந்த பெண் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை பேஸ்புக், வாட்ஸாப்பில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி ஜுனைத்தும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். வீடியோவை வைத்து மிரட்டி 8 நபர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதில் 9ஆம் வகுப்பு, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என்பது தான் மிக துயரமான விஷயம். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 8 நபர்களும்  விருதுநகர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.






சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் மீதான மூன்றாவது நாள் விவாதத்தின் முடிவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் பேசினார். அப்போது பேசிய அவர், விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வண்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என தெரிவித்திருந்தார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண