கரூரில் வெவ்வேறு இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 39, கரூர், தான்தோன்றி மலை டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூரை சேர்ந்த குடியரசு 22, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்தார். .இது குறித்த புகாரின் பெயரில் குடியரசை தாந்தோன்றி மலை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி சேர்ந்தவர் காளீஸ்வரன் 20, இவர் கரூர் காமராஜ் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருந்த போது, கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்த சண்முகசுந்தரம் வயது 28, கத்தியை காட்டி பணம் பறித்தார் . கரூர் டவுன் போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.

 மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சேர்ந்த ராஜா 33, கரூர், அருகம்பாளையம் டாஸ்மாக் கடை அருகில்  நின்று கொண்டிருந்த போது நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீ ராம் கார்த்தி 32, அவரிடம் இருந்த பர்ஸை திருடி சென்றனர்.வெங்கமேடு போலீசார் ஸ்ரீராம் கார்த்திகை கைது செய்து சிறையில் அடைத்தனர்.கரூர் முத்துராஜபுரத்தை சேர்ந்த குணசேகரன் 23, மக்கள் பாதை பிரிவு சாலையில் நடந்து சென்ற போது, கரூர் , மாவடியன் கோவில் பகுதியை சேர்ந்த வினோத் குமார் 23, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதையடுத்து கரூர் டவுன் போலீசார் வினோத் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாட்ச்மேனிடம் பணம் பறித்த திருநங்கைகள் மீது வழக்கு 

 

 

பெட்ரோல் பங்க் வாட்ச்மேனிடம் பணம் பறித்து கொண்டு ஓடிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆறுமுகம் 73, இவர் கரூரில் உள்ள பெட்ரோல் பங்கில் வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் பணியில் இருந்த போது நிரஞ்சனா, எழில், சஞ்சனா ஆகிய திருநங்கைகள் வந்துள்ளனர். அவர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தர மறுத்து தகராறு செய்துள்ளனர். அப்போது வாட்ச்மேனிடமிருந்து 9,200 ரூபாய் பணத்துடன் இருந்த பேக்கை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர்.இது குறித்து வாட்ச்மேன் அளித்த புகார் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அருகே நில தகராறு: விவசாயியை அறிவாளால் வெட்டியவர் கைது.

 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வலையார்பாளையத்தை சேர்ந்தவர் பிச்சை மகன் ராஜேந்திரன் இவரது தாய் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்கள் 3 பேரும் பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில் சீத்தலவாய் மஞ்சமேட்டை சேர்ந்த நடேசன் மகன் ரமேஷ் வயது 48 என்பவர் இந்த 6 ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என்றும் அதில் ராஜேந்திரன் மற்றும் அவரது அண்ணன்களுக்கு உரிமை இல்லை என கூறி பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காலை ராஜேந்திரன் தனது மனைவி மகேஸ்வரி உடன் தான் பயன்படுத்தி வரும் இடத்தினை சுத்தம் செய்த போது அங்கு வந்த ரமேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் அப்போது ராஜேந்திரனை அறிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த வெட்டு காயத்துடன் குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.