சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளிமாநிலம் செல்லும் ரயில்களும், மின்சார ரயில்களும் இயக்கப்பபடுவதால் போலீசார் எப்போதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். நாளை குடியரசுதினம் என்பதால் கண்காணிப்பு பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. இந்த ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்று கொண்டிருந்த நிலையில், ஒரு பயணி மட்டும் சந்தேகத்திற்குரிய வகையில் அங்குமிங்கும் சுற்றித்திரிந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
அவரிடம் காவல் ஆய்வாளர் வடிவுக்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினார். அப்போது, அவர் பல்வேறு திருட்டு வழக்கில் தொடர்புடைய செந்தில்குமார் என்று கண்டறிந்தனர். மேலும், அவர் ஒரு முன்னாள் போலீஸ்காரர் என்பதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை பரிசோதனை செய்ததில் அவரிடம் தங்க நகைகளும், செல்போன்களும் இருப்பதை கண்டுபிடித்தனர்.
விசாரணையில் அந்த நகைகள் அனைத்தும் திருட்டு நகைகள் என்பதை போலீசாரிடம் செந்தில்குமார் ஒப்புக்கொண்டார். பின்னர், அவரிடம் இருந்த ஐந்தரை சவரன் தங்க நகைகளும், 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த திருட்டு நகைகளை சென்னை மூர்மார்க்கெட்டில் விற்பதற்காக அவர் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தததாக ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
தமிழ்நாடு அரசின் காவல்துறையில் பணியாற்றி வந்த செந்தில்குமார், சிறப்பு காவல்படையில் காவலராக பணிபுரிந்துள்ளார். பின்னர், பல்வேறு திருட்டு வழக்குகளில் இவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததையடுத்து, காவல்துறையில் இருந்து இவர் 2009-ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். பின்னர், சென்னை மற்றும் ஆந்திராவில் ரயில் பயணிகளிடம் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். காவல்துறையில் பணியாற்றிய நபரே திருடிய நகைகளை விற்க வந்தது போலீசாருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு நகைகளை விற்க வந்த போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : Thanjavur Student Suicide: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : வீடியோவை பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை
மேலும் படிக்க : காஞ்சிபுரம் : கவரிங் நகை வாங்கிக்கொண்டு ரூ.1.64 கோடி நகை கடன் மோசடி..! அதிகாரிகள் இருவர் கைது..!
மேலும் படிக்க : Dating app Crime: நைட்டெல்லாம் சாட்.. கண்ணை மறைத்த ஆன்லைன் காதல்.. டேட்டிங் ஆப் தோழி கொடுத்த ஷாக்.!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்