தி.மு.க சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளரும், முன்னாள் எம்.பி.,யுமான டாக்டர் மஸ்தான். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார். சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்த்த பொழுது சிகிச்சை பலனின்றி,  உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. திடீர் மரணம் அடைந்த மஸ்தான் உயிரிழந்தில் சந்தேகம் இருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த சந்தேகத்திற்கு அடிப்படையில் புகாரைப் பெற்றுக் கொண்டு கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 



 

இந்நிலையில் , இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடுவாஞ்சேரி காவல்துறையினர் 4 பேரை கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது மகனுக்கு கடந்த 23ஆம் தேதி , திருமணம் வைத்திருந்த நிலையில்  மஸ்தான் உயிரிழந்தது  பரபரப்பு ஏற்படுத்தி இருந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக நான்கு பேர் கைது செய்து கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‌ முன்விரோதம் மற்றும் கொடுத்தல் வாங்கல் பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்து உள்ளதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.