சீர்காழி மீன் மார்க்கெட்டில் மீன்கள் திருட்டு - பெண் வியாபாரிகள் வேதனை

சீர்காழி மீன் மார்க்கெட்டில் 50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் திருட்டு போனதை கண்டு மீன்  விற்பனையாள பெண்கள்   வேதனையுடன் கதறி அழுதனர்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழிலாக மீன் பிடி தொழிலும், விவசாயமும் இருந்து வருகிறது. இங்கு சுமார் 22 மீனவ கிராமங்கள் உள்ளதால் அங்கு பிடிக்கப்படும் மீன்கள் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட் கட்டிடத்தில் ஒருபுறம் ஆடு, கோழி இறைச்சி கடைகளும், மறுபுறம் இறால், மீன், நண்டு போன்ற கடல் மீன் வகைகள் என 50க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.

Continues below advertisement


கடந்த 30 ஆண்டுகளாக விற்பனைக்கு வரும் மீனவர்கள் மீன், இறால், நண்டு என விற்பனையானது போக மீதம் உள்ள மீன்களை ஐஸ் பாக்ஸ்களில் வைத்து பூட்டிவிட்டு செல்வது வியாபாரிகளின் வழக்கம். அடுத்த நாள் கொண்டுவரப்படும் மீன்களுடன் இருப்பு இருந்த மீன் வகைகளையும் சேர்த்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் வழக்கம்போல் நேற்றிரவு மீன், இறால் போன்றவற்றை ஐஸ் பாக்சில் வைத்து வைத்துபூட்டிவிட்டு சென்ற மீனவர்கள், காலையில் வந்து பார்த்தபோது மீன்கள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். திருட்டு சம்பவம் குறித்து சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும், காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நகராட்சி மீன் விற்பனை கூடங்களில் சிசிடிவி அமைத்து தர மீனவ பெண்கள் கதறி அழுதவாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.


மயிலாடுதுறை  மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு மயிலாடுதுறை  மாவட்ட ஆட்சியர் லலிதா காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. 


அவ்வறிவிப்பின்படி 2022-23 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாள் விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள் ஆகியோரின் பிறந்தநாள்களையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற்றன. அப்போட்டிகளில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு 1,30,000 ரூபாய்க்கான காசோலைகளும, பாராட்டுச் சான்றிதழ்களும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அன்பரசி, தமிழ் வளர்ச்சித் துறைப் பணியாளர்கள், பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

9 Years of Arrambam : 9 ஆண்டுகளை கடந்த அஜித்தின் ஆரம்பம்.. துணிவு ஜுரம் ஸ்டார்ட் ஆகிடுச்சா?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola