புதுச்சேரி அருகே வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55). தனியார் கார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரின் முதல் மனைவி கடலூரில் வசித்து வரும் நிலையில் இரண்டாம் மனைவி உடன் வீராம்பட்டினத்தில் வசித்து வந்தார். இத்தம்பதிக்கு பிறந்த மகனான தினேஷ் (24). புதுவை பாலிடெக்னிக் கல்லூரில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டு மனைவிகள் என்பதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு 7 மணியளவில் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஏன் இப்படி அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறாய், நிம்மதியாகவே இருக்க முடியவில்லை என்று கூறி, தந்தை கிருஷ்ண மூர்த்தியை மகன் தினேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது.
Sivakumar Speech | கலைஞர் காலில் விழுந்து வணங்கணும்! நடிகர் சிவக்குமார் பேச்சு
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அருகில் இருந்த கத்தியை எடுத்து மகன் தினேசை சரமாரியாக குத்தினார். இதில் கழுத்து மற்றும் மார்பில் கத்திக்குத்து விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். ஆத்திரத்தில் மகனை கத்தியால் குத்தியதால் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த தினேசை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர். குடும்ப தகராறில் தந்தையே தனது மகனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்