மதுரை வண்டியூர் அழகர் மனைவி முனியம்மாள். 43 வயதான இவர், ‛பிக் பாக்கெட்’ எக்ஸ்பர்ட் என சமூக விரோதிகள் மத்தியில் புகழப்படுகிறது. ‛முனியம்மா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல...’ என்கிற ரீதியில் தான் அவரது பிக்பாக்கெட் சம்பவங்கள் இருக்குமாம். ஓடும் பஸ், மழைக்கு ஒதுங்கும் கூட்டம், டிராபிக் ஜாம், கூட்ட நெரிசல் எதுவாக இருந்தாலும் முனியம்மா அன்று ‛ஹனி’யம்மா. ஒரு முறை களத்தில் இறங்கினால், கை நிறைய பணமும், நிறைந்த மனமுமாய் தொழிலை செய்து பழகிய முனியம்மாள் தான், தற்போது கைதாகியிருக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உதவியாளராக பணியாற்றும் டி.வளையங்குளத்தைச் சேர்ந்த பாலாமணி என்பவருக்கு உடல்நிலை சரியில்லாமல், தன் ஊரிலிருந்து திருமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது தான் ‛கெட் தி மேன் வித் தி பிளான் ரைட் ஹெர்.... பிரிங்ன் ஸ்வக் வித் தி மேன் ரைட் ஹெர்...’ என, மாஸ்டர் தீம் பாணியில் பஸ்ஸில் எண்ட்ரி ஆனார் முனியம்மாள். பஸ்ஸில் ஏறி கூட்டத்தை பார்த்தவருக்கு போக்கிரி விஜய் டயலாக் தான் நியாபகம் வந்துள்ளது. ‛வந்திருக்க இடம் சூப்பர்... பட்டைய கிளப்பலாம்... நம்ம ரேஞ்சுக்கு ஒருத்தனை அடிக்கனுமானு நெனச்சேன்... பத்து நிக்குது... மொத்தமா வசூல் பண்ணிக்கிறேன்...’ என்பது போல, கூட்ட நெரிசலில் கூலாக பணியை துவக்கினார் முனியம்மாள்.
சட்டை பையில் இருப்பதை லெகுவாக எடுக்கும் முனியம்மாளுக்கு, கட்டைப் பையில் இருக்கும் பர்ஸ் எடுப்பது ரிஸ்க் என அதுவரை தெரியாது. பஸ்ஸில் ஒரு தட்டு தட்டிவிட்டு, இறுதியாக பாலாமணியின் கட்டைப்பையில் இருந்த பர்ஸை உருவிய போது, வேல்பாண்டி என்பவர் அதை பார்க்க, கையும் களவுமாக பிடிபட்டார் முனியம்மாள். முனியம்மாளுக்கு அன்று சனியம்மாள் என்பது அதுவரை தெரியாது. ஒட்டுமொத்த பேருந்தும் அலற, திருமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் முனி. ‛வர்றாடா முனி... வந்துட்டா முனி...’ என்பது போல, போலீசாரும் அவரை அழைத்து, விசாரணை நடத்தினர். ‛இன்னைக்கு பெரிசா ஒன்னுமில்லை... இந்தாங்க இது தான்...’ என, பர்ஸ் மற்றும் ரூ.750யை, லிங்கா படத்தில் அணையை ரஜினி ஒப்படைப்பது போல, பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்தார் முனியம்மாள். திருமங்கலம் எஸ்.ஐ., மாரிகண்ணன், இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, முனி செய்த மினி குற்றங்கள் முதல் மெனி குற்றங்கள் வரை விசாரணையை துவக்கியுள்ளார். யாரும் ஹெஸ் செய்ய மாட்டார்கள் என பஸ்ஸில் ஏறி, புஸ்னு சிக்கிய முனியம்மாளின் இந்த கைது, அவரது பிக்பாக்கெட் வரலாற்றின் கருப்பு நாள் என்கிறார்கள் அவரது சமூக விரோத கூட்டாளிகள். ‛மனி மைண்ட்’ முனியம்மாள் இனி கொஞ்ச நாட்களுக்கு சிறையம்மாளாக இருப்பார்.