பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோவில்  பங்கேற்பாளர் வனிதா விஜயகுமார் மற்றும் நடுவர் ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் வீடியோவாக வெளியாகியுள்ளது.


விஜய் டிவியில் சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகள்தான் அதிகளவில் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது. குக்வித் கோமாளி, சூப்பர் சிங்கர், பிக்பாஸ், மிஸ்டர் அன்ட் மிஸ்சஸ் சின்னத்திரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் இடத்தில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. அந்த வரிசையில் பிக்பாஸ் அனைத்துச் சீசன்களிலும் கலந்து கொண்டவர்கள் மட்டும் பங்கேற்கும் பிக்பாஸ் ஜோடி தற்பொழுது ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சிக்கு நடுவராக ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் ஆகிய இருவரும் உள்ளனர். மேலும் பிக்பாஸின் அனைத்துச் சீசன்களிலும் கலந்து கொண்டவர்கள் ஜோடியாக தற்பொழுது இந்நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ளனர். குறிப்பாக கேப்ரியல்லா- ஆஜித், மோகன் வைத்யா- பாத்திமா பாபு, ஜூலி- சென்ராயன், நிஷா- பாலாஜி உள்ளிட்ட பல்வேறு ஜோடிகள் களம் கண்டாலும் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது வனிதா- சுரேஷ் சக்கரவர்த்தியின் நடனம் மட்டுமில்லாது நடுவர்களிடம் இவர்கள் போடும் சண்டையும்தான்.




அதற்கேற்றால் போல் தான் ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் வெளியாகிறது வனிதா – ரம்யா சண்டையிடும் ப்ரோமோக்கள். இந்நிலையில் கடந்தவாரமே, “தான் இந்த பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவதாகவும், தான் அவமானப்பட்டுவிட்டதாக வனிதா கூறிவந்தார். 






பிக்பாஸ் வீட்டில் வந்ததுபோல் “நாடா இல்லை காடா“ என்கின்ற போட்டி இந்த வார பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில், வனிதா விஜயகுமார் காளி போல வேடம் அணிந்து ஆடி இருக்கிறார். இந்நடனத்திற்கு கமெண்ட்  சொன்ன ரம்யாகிருஷ்ணன் உடன் வனிதா விஜயகுமார் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருப்பது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும் அதில் என்னை மற்ற போட்டியாளர்கள் உடன் Compare செய்யாதீர்கள் என வனிதா கேட்க, இது competition அது எப்படி compare பண்ணாமல் இருக்க முடியும் என ரம்யா கேட்டு இருக்கிறார். இதனையடுத்து இறுதியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களிடம் வனிதா மைக்கினை கொடுத்துவிட்டு அங்கிருந்து திடீரென வெளியேறியிக்கும் ப்ரோமா வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த வார நிகழ்ச்சியினை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியினைப்போன்று பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் வனிதாவின் அதிரடிக்கு பஞ்சமே இல்லை என்றே கூறலாம்