தமிழ்நாட்டில் பெரும்பாலான குற்றங்கள், கஞ்சாவை முன்வைத்தே நடக்கிறது.கொலை , கொள்ளை, திருட்டு மிரட்டல் அனைத்து சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கும் காரணமாக இருப்பது, கஞ்சா மட்டுமே. அதனால் தான் கஞ்சாவை ஒழிக்க தமிழ்நாடு காவல் துறை சிறப்பு முயற்சியை எடுத்து வருகிறது. குறிப்பாக, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களிலிருந்து தமிழகம் வரும் கஞ்சாவை ஆரம்ப வழியில் தடுக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து கஞ்சா கும்பல்கள் கைது நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த தேடுதல் வேட்டை நடந்தாலும், தலைநகர் சென்னையில் தான் அதிக அளவில் கஞ்சா வேட்டையில் பலர் சிக்கி வருகின்றனர். அதற்கு காரணம், அருகில் ஆந்திரா இருப்பதால், சென்னை வழியாக தான், தமிழகத்தில் கஞ்சா ஊடுருவுகிறது. அதை தடுத்தால் பிற பகுதிகளுக்கு செல்வது கட்டுப்படும். அது மட்டுமின்றி, தலைநகரில் நேரடியாக கஞ்சா விற்பனைக்கு வருவது, பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்.




அந்த வகையில் சென்னையில் அடுத்தடுத்து கஞ்சா குற்றவாளிகள் கைதாகி வருகின்றனர். அதன் தொரடச்சியாக சென்னையின் பிரபல கஞ்சா கும்பல் கைதாகியுள்ளது. சென்னை ரெட்டில்ஸ் பகுதியைச் சேர்ந்த வினோத் வயது 34 இவர் மீது ரெட்டில்ஸ் எண்ணூர் உள்ளிட்ட  காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளன. இதே போன்று ரெட்டில்ஸ் விளாங்காடு பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 31 இவர் மீதும் ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல குற்ற வழக்குகள் உள்ளன.


இவர்களது நண்பரான வியாசர்பாடி சாமந்திப் பூ காலனியை சேர்ந்த இலக்கிய குமார் 33 இவர் மீது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் 3 பேரும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வட சென்னையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விற்று வந்தனர். கொடுங்கையூர் போலீசார் இவர்கள் மூன்று பேரையும் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி கொடுங்கையூர் பகுதியில் வைத்து கைது செய்து இவர்களிடம் இருந்து 10 கிலோ கஞ்சா 75 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து இவர்களை சிறையில் அடைத்தார். இந்நிலையில் தொடர்ந்து இவர்கள் வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததை அடுத்து கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் இவர்கள் மூன்று பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்திருந்தார். அதனை ஏற்று இவர்கள் 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.