நாகரிகம் வளர்ச்சியினால் இன்று டெக்னாலாஜி எடுத்திருக்கும் விஸ்வரூபம் நம்மை ஒவ்வொரு நாளும் மலைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மனித சமூகத்திற்கு நன்மைகள் பல விளைந்தாலும், அதே அளவிற்கும், அதற்கு அதிகமாகவும் தீமைகள் நாளுக்கு நாள் விளைந்து கொண்டுதான் இருக்கின்றன.


அந்தப் பட்டியல் ஆபாச பட திருட்டு முதல் ஆன்லைன் மோசடி வரை அது நீண்டுகொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது கேரளாவிலும் ஆசிரியை ஒருவரிடம் டிஜிபி புகைப்பட இருந்த வாட்ஸ் அப் கணக்கை வைத்து, வட இந்தியர் ஒருவர் 14 லட்ச ரூபாய் பணத்தை அபேஸ் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. எப்படி நடந்தது இந்த க்ரைம்.. பார்க்கலாம் 


லாட்டரி வென்றதாக மெசஜ்


கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஆசிரியர் அனிதா. இவரது போனுக்கு வாட்ஸ் அப் எண் ஒன்றிலிருந்து, அவர் லாட்டரி ஒன்றை வென்றிருப்பதாகவும்,   அந்தப்பணத்தை பெறுவதற்கு அவர், சர்வீஸ் சார்ஜாக 14 லட்சத்தை முன்பணமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 


 


 


 




காவல்துறையிடம் செக் செய்த அனிதா


ஆனால் அனிதா அதை நம்பவில்லை. இதனையடுத்து டிஜிபி அணில்காந்த் புகைப்படம் இருந்த மற்றொரு வாட்ஸ் அப் எண்ணில் இருந்து மெசஜ் ஒன்று வந்திருக்கிறது. அந்த மெசஜ்ஜில், வரிப்பணத்தை தான் டெல்லி வருவதற்குள் செலுத்த வில்லை என்றால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.




அபேஸ் செய்த வட இந்தியர்


இதனையடுத்து, அனிதா மாநில காவல்துறை தலைமையகத்திற்கு கால் செய்து செக் செய்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் அன்றைய தினம் அணில் காந்த் டெல்லி சென்றிருப்பதாக கூறியுள்ளனர். இதனையடுத்து வந்த செய்தி உண்மை என நம்பிய அனிதா அவர்கள் கேட்ட பணத்தை  ட்ரான்ஸ்வர் செய்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து இது ஒரு ஏமாற்று வேலை என்று அறிந்த அனிதா காவல்துறையிடம் புகார் அளிக்க, போலீசார் நடத்திய புலன் விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட நபர் அஸ்ஸாமை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து அந்த நபரை கைதுசெய்ய சைபர் க்ரைம் போலீசார் புதுடெல்லிக்கு  புறப்பட்டு சென்றுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண