பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு படப்பிடிப்பின்போது  முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பாலிவுட் நடிகை சன்னி லியோன், விக்ரம் பட் இயக்கத்தில் ‘அனாமிகா’ என்ற புதிய வெப் சீரிஸில் நடித்துள்ளார்.


‘ஜிஸ்ம் 2’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி, ‘ஏக் பஹேலி லீலா’,  ‘மஸ்திஜாதே’, 
‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ போன்ற படங்களில் நடித்துள்ள, சன்னி லியோன் புதிய வெப் சீரிஸ் அவரது நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது. இதில் ஆக்‌ஷனில் கலக்கியுள்ளார்.


இதன் படபிடிப்பின்போது சன்னி லியோனுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதுகில் காயம் ஏற்பட்டிருக்கும் சன்னிலியோனுக்கு சிகிச்சை அளிப்பது போல இருக்கிறது. அத்துடன்,  ‘அனாமிகாவில் எனக்கு என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். இந்த சீரியஸ் mxplayerஇல் மார்ச் 10ஆம் தேதி வெளியாகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக, அனாமிகா வெப் சீரியஸ் குறித்து சன்னி அளித்த பேட்டியில், “இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தொடராகும். அனாமிகாவுடன் மிகவும் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளேன். ஒரு பார்வையாளர் என்ற முறையில் நான் ஆக்ஷன் கதைகளையும் பார்க்க விரும்புகிறேன். இந்த வெப் சீரிஸ் இரண்டையும் செய்ய எனக்கு வாய்ப்பளித்துள்ளது. தனிப்பட்ட முறையில் நான் அனாமிகாவைப் போல் இல்லை என்றாலும், அந்த ஆக்‌ஷன் காட்சிகள் மிகவும் உற்சாகமாக இருந்தது. இந்த சீரியஸில் நான் மிகவும் உற்சாகமடைந்ததற்கு ஒரு காரணம் விக்ரம் சார். நான் பயிற்சி பெற்ற நடிகை இல்லை, ஆனால் விக்ரம் சார் என்னை ஒரு நடிகையாக வளர்த்தெடுத்துள்ளார்.


அனாமிகா கதாபாத்திரம், உடல் மொழி, வெளிப்பாடு போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார். கதை முதல் திரை வரை ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க, சார் எனக்கு எல்லாவற்றையும் கற்றுத் தந்துள்ளார். இதற்கு முன்பு நான் ஆக்‌ஷனில் கொஞ்சம் பயிற்சி பெற்றிருந்தோம். ஆனால் இந்த தொடருக்கான பட்டறையின் போது, ​​எனது உடல் மொழியில் விஷயங்களை எவ்வாறு உள்வாங்குவது என்பதை நான் கற்றுக்கொண்டேன். சண்டை என்பது பல்வேறு தற்காப்புக் கலைகளின் கலவையாகும், அதே போல் தெருச் சண்டைகள், கராத்தே போன்றவற்றின் கலவையாகும். ஒரு கதாபாத்திரத்தின் உடல் மொழியைக் கட்டமைக்க இந்த வடிவங்களை எவ்வாறு கலக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்தேன்.


சமீர் சோனி, சொன்னாலி செய்கல், ராகுல் தேவ், ஷேஜாத் ஷேக், அயாஸ் கான் ஆகியோரும் பங்கேற்ற 'அனாமிகா' நிகழ்ச்சி மார்ச் 10 அன்று MX பிளேயரில் வெளியாகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண