திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு  1967 ஆம் ஆண்டு வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், அந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்  திமுக அரிதி பெரும்பான்மை பெற்று முதன் முதலாக திராவிட ஆட்சியை தமிழ்நாட்டில் வேரூன்றியது. காங்கிரஸ் அல்லாத திராவிட சித்தாந்த ஆட்சிக்கு வித்திட்டது. அண்ணாதுரை தமிழ்நாட்டின் ஆறாவது முதலமைச்சரானார். 06.03.1967 ஆண்டு அண்ணாதுரை முதலமைச்சாராக பொறுப்பேற்ற தினம் இன்று. தமிழ்நாட்டின் திராவிட ஆட்சி தொடங்கி 55 ஆண்டுகள் ஆகிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், வரலாற்றி சி.என். அண்ணாதுரையின் பெயர் தவிர்க்க முடியாதது. அண்ணாதுரைக்குப் பிறகுதான் தமிழ்நாடு பல முன்னேற்றங்களைக் கண்டது. பல இளைஞர்களைக் கொண்ட அண்ணாவின் அமைச்சரவையின் செயல்பாடும் பெரிதும் பேசப்பட்டது.


சி.என்.அண்ணாதுரை செப்டம்பர்,15,1909ல் காஞ்சிபுரத்தில் பிறந்தார். பொருளாதாரம் மற்றும் அரசியல் பயின்றவர். மிகச் சிறந்த எழுத்தாளர். சிற்நத பேச்சாளர். இவர் இயற்றிய மேடை நாடகங்கள், அந்தக் காலக்கட்டத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவரின் தனித்துவமான சிந்தனை, இவர் எழுதிய நாடங்களில் பிரதிபலித்தன.  இவருடைய நாடகங்கள் சீர்திருத்த எண்ணங்களையும், பல முற்போக்கு சிந்தனைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. திரைப்பட கதை மற்றும் வசனம் மூலம் திராவிட சீர்திருத்த சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சென்றார். எளிய நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர், பள்ளி ஆசிரியராக தன் வாழ்வைத் தொடங்கியவர் அண்ணா. இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு தன் பங்களிப்பை அளிக்க ஒருபோதும் தயங்கியத்தில்லை அண்ணா.


 






பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நீதிக் கட்சியில் சேர்ந்தார். பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களில் முதன்மையானவர். அண்ணாவினுடைய மேடைப் பேச்சிற்கு மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. தெளிவும் அறிவும் மிகுந்திருக்கும் அவருடைய உரைகள். பின்னர், பெரியார் கொள்கைகளில் ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக  1949, நீதிக் கட்சியில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அதன்பின்னர், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கினார். மும்மொழிக் கொள்கையை மாற்றி தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கையை சட்டமாக நிறைவேற்றினார். அண்ணா செய்த சாதனைகளில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது,  27.6.1967-ல் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றியதுதான்.  சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ் என்பது ‘தமிழக அரசுஎன்று மாற்றப்பட்டது. அதில் இருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழில் இடம்பெற்றது. அண்ணா கட்சி தொடங்கியபோது முன்வைத்த கொள்கைகள், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் ஆகியவற்றை ஆட்சிப் பொறுப்பேற்றதும் பெரும்பாலனாவற்றை செயல்படுத்த முயற்சி செய்தவர் அண்ணார்.


ஆகாஷ்வாணி’ என்பதற்கு பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்திரவிட்டார் .  விலையில்லா அரிசி திட்டத்தைத் தொடங்கினார். பின்னர். தம்பி – தங்கையர் விலையில்லா அரிசியாக அதை விரிவுபடுத்தினர்


திமுகவில் மளிரணியை தொடங்கியது, பலரும் திமுகவில் இணைந்தது ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் அண்ணா.


இவருடைய ஆட்சி காலத்தில் பல கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அதன்பின்னர் இவருடைய பெயரில் கட்சிகள் தொடங்கப்பட்டது. பல்வேறு சாதனைகளுக்கும், சமூக சீர்திருத்தத் திட்டங்களுக்கு முன்னோடியாக இருந்த இவரால் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க  முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார்.


பேராளுமை கொண்ட எளிய மனிதனை வழியனுப்ப அவரின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றது.


தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் தனக்கான இடத்தை, தன் தெளிவான சிந்தனையுடன் அரும்பெரும் செயல்களால் நிரப்பிச் சென்றவர் அறிஞர் அண்ணா. அண்ணாவின் புகழ், பெயர் என்பதை பின்னுக்குத்தள்ளி அவர் தமிழ்நாட்டிற்காக செய்தவைகள் என்றும் வரலாற்றில் நிலைத்து நிற்கும். என்றைக்குமே , அண்ணா, அனைத்து மக்களுக்கும் குறிப்பாக, அரசியலுக்கு வர வேண்டும் என்ற கனவு  இருப்பவர்களுக்கு ஓர் முன்னோடி என்று கூறலாம்.