நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மனக்காவலம் பிள்ளை நகரை சேர்ந்தவர் 19 வயது உதயராஜ். குற்றவழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பெருமாள்புரம் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதியாக அழைத்துச் செல்லப்பட்டார். திடீரென அவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டதால் உடனடியாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சையிலிருந்த அவர் தப்பி ஓடினார். போலீசாரின் பாதுகாப்பை மீறி கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லையில் அரசு மருத்துவமனையில் இருந்து விசாரணைக் கைதி எஸ்கேப்
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 19 Apr 2021 09:43 AM (IST)
நெல்லையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விசாரணை கைதி, சிகிச்சையிலிருந்து தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ACCUST_(1)