கரூர் அருகே தந்தை, மகனுக்கு இடையே இருந்த விரோதம் காரணமாக பேரனுடன் சேர்ந்து மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த தந்தை -விபத்து போல சித்தரித்து உறவினர்களை வரவழைத்து இறுதி காரியத்தை முடித்த முதியவர் மீது மருமகள் அளித்த புகாரின் பேரில், பேரனுடன் சேர்ந்து கைது.


 


 




 


 


கரூர் மாவட்டம், ஜெகதாபியை சேர்ந்தவர் மாரியப்பன் என்கிற மனோகரன் (43) டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி சுதா(40) என்ற மனைவியும், பிரிய லட்சுமி(17) என்ற பெண் குழந்தையும், திவாகரன்(13) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.  இந்த நிலையில் மனோகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மது போதையில் இருந்து விடுபடுவதற்காக சேலத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.


 


 




 


 


அப்போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் மனோகரன் வீட்டிற்கு நேர் எதிரே அவருடைய தந்தை மாணிக்கம் (71) புதியதாக வீடு கட்டும் பணியை தொடங்கியுள்ளார். இதனை மனோகரனின் மனைவி சுதா எங்கள் வீட்டிற்கு நேர் எதிராக ஏன் வீடு கட்டுகிறீர்கள், எனது கணவர் வந்த பின்பு வீடு கட்டும் பணியை தொடங்குங்கள் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் மது போதையில் வந்து மருமகள் சுதாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதை சிகிச்சை முடித்து வீட்டிற்கு வந்த தனது கணவர் மனோகரனிடம் சுதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனோகரன் இது குறித்து தனது தந்தை மாணிக்கத்திடம் சண்டை போட்டுள்ளார். ஆத்திரமடைந்த மாணிக்கம் தனது மகள் வழி பேரன் மணிராஜை வரவழைத்து, மனோகரனை அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து குச்சியால் பலமாக தாக்கியுள்ளனர். இதில் மனோகரன் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. 


 


 




 


 


இதை மனோகரனின் மனைவி சுதாவிடம் கூறி இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என கூறி மிரட்டி, நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் வரவழைத்து சாலை விபத்தில் மனோகரன் இறந்து கிடந்ததாக கூறி, உறவினர்களுடன் சேர்ந்து மனோகரன் உடலை சுடுகாட்டுக்கு தூக்கி சென்று எரித்து விட்டனர். இதுகுறித்து மனோகரனின் மனைவி சுதா அளித்த புகாரின் பேரில், வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணிக்கம் மற்றும் மணிராஜை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி, நீதிமன்ற காவலுக்கு திருச்சி நீதிமன்றத்தில் அனுப்பி வைத்தனர்.


 


 


Join Us on Telegram: https://t.me/abpdesamofficial