விழுப்புரம் அருகே 16 வயது சிறுமி 11ஆம் படித்து வந்தார். இவரது பெற்றோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டனர். எனவே புதுச்சேரியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்த மாணவி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது பெரியம்மா குப்பு பராமரிப்பில் பள்ளிக்கு சென்றுவந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனே உறவினர்கள் அந்த சிறுமியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மாணவியின் வயிறு பெரியதாக இருந்ததால் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அப்போது அந்த மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 81), இளையராஜா (28), மோகன் ஆகியோரை கைது செய்தனர். இதில் மோகன் மாணவிக்கு அண்ணன் உறவு முறையாவார். இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கு மாணவியின் பெரியம்மா குப்பு உடந்தையாக இருந்துள்ளார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இந்த சம்பவத்தில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (25), பிரபு (37), பாபு (22), சத்யராஜ் (28) ஆகியோரும் மாணவியை வன்புணர்வு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது. சிறுமியின் பெரியம்மா குப்பு கூலி வேலைக்காக வெளியே சென்றுவிடுவார். தனியாக இருக்கும் மாணவியிடம் அண்ணன் உறவுமுறை கொண்ட மோகன் அடிக்கடி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக வன்புணர்வு செய்துள்ளார். இது மோகனின் தாய் குப்புவுக்கு தெரியவந்தும் அதனை கண்டும் காணாதது போல் இருந்துள்ளார்.
இந்த விபரம் 81 வயது முதியவர் வெங்கடேசனுக்கு தெரிய வந்தது. அவரும் மாணவியை மிரட்டி வன்புணர்வு செய்த கொடுமை அரங்கேறி உள்ளது. இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ஒருவர் பின் ஒருவராக மாணவியை வன்கொடுமை செய்துள்ளனர். பெற்றோரை இழந்ததால் மாணவிக்கு உறவினர்களே வில்லனாக மாறி உள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 8 பேர் போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ளனர். மேலும் கிடுக்கிப்பிடி விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இதற்கிடையில் ஏழுமலை ஆந்திரமாநிலம் நெல்லூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் நெல்லூர் விரைந்து சென்று ஏழுமலையை இன்று அதிகாலை கைது செய்தனர். கைதான அவர் செஞ்சி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படுத்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்