திருச்சியில் உள்ள மன்னார்குடி பெண் துணை கலெக்ட்ரின் வீடு, பெட்ரோல் பங்க், பள்ளியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


மன்னார்குடி தனி துணை கலெக்டராக வருவாய் நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் பவானி (45). இவரின், வீடு திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் சாலையில் உள்ளது. இவரின், கணவர் இறந்த நிலையில் மூத்த மகனுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், பவானி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்த நிலையில், அந்தப் புகாரின் பேரில் திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


அதன்படி, பவானிக்கு சொந்தமான வீடு, லால்குடி அருகே வாளாடியில் உள்ள பெட்ரோல் பங்ங், மண்ணச்சநல்லூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், பெட்ரோல் பங்க் மற்றும் பள்ளியில் ஏராளமான ஆவணங்கள் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன.


அரசு அதிகாரியாக பவானி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக வந்த புகாரில் சோதனை நடத்தப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியுள்ளனர். 




கடந்த 2011ல் ஸ்ரீரங்கம் கோயிலில் அன்னதான திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தபோது தாசில்தாராக பவானி பணியாற்றினார். முன்னாள் அரசு கொறடாவும், தற்போது அமமுக மாநில செயலாளருமான மனோகரனுக்கு பவானி தங்கை முறை உறவினர் ஆவார். இவர், மன்னார்குடிக்கு தினமும் திருச்சியிலிருந்து சொகுசு காரில் சென்று வருவதாகவும், இவருக்கு 100 டேங்கர் லாரிகள், கொடைக்கானலில் பண்ணை வீடு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


ஸ்ரீரங்கம் நெல்சன் ரோட்டில் உள்ள வீட்டின் மதிப்பு 1.50 கோடி. சொந்த ஊரான விருதுநகரில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய வீடு கட்டி வருகிறார். வாளாடி பெட்ரோல் பங்க் தவிர சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பெட்ரோல் பங்க், திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் அருகே அத்தாணியில் எஸ்எஸ் டியூப் என்ற பெயரில் கம்பெனி உள்ளது. இவரது ஸ்ரீரங்கம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் மற்றும் 10 பேங் செக் புக் பறிமுதல் செய்யப்பட்டது. வீட்டில் ரொக்கம் 1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. வீட்டில் 2 சொகுசு கார் குறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 2011 முதல் 2016 வரை ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூரில் செட்டில்மென்ட் தாசில்தாராக பணியில் இருந்த பவானி, அதிகார துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்து பெட்ரோல் பங்க் மற்றும் சொத்துக்கள் வாங்கியது அம்பலமாகியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


மேலும் வாசிக்க: ”விருது கிடைச்சதே 25 வருஷங்களுக்குப் பிறகுதான் தெரியும்” : அலறவிட்ட பேய்ப்பட நாயகி ஓப்பன் டாக்..


 


‛டிச.5 மெரினாவுக்கு வாங்க...’ அதிமுக செயற்குழு கூடும் நிலையில் சசிகலா அழைப்பு!