தமிழகத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதி இலங்கை கடற்பகுதியும் அருகருகே என்பதால், இங்கிருந்து வேதாரண்யம் வழியாக இலங்கைக்கு படகுகள் மூலம் கஞ்சா கடத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது.




கடற்கரையில் கஞ்சா பொட்டலங்கள்:


வேதாரண்யம் பகுதியில் கஞ்சா கடத்துவது  தொடர்ந்து வருவதும் அது தொடர்பாக பலரும் கைதாவதும் நடந்தேறி வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமத்தில் கடற்கரையோரத்தில் நேற்று முன்தினம் இரவு 2 மர்ம பொட்டலங்கள் கரை ஒதுக்கி இருப்பதாக மீனவர்கள் கடலோர காவல்படை காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி கடற்கரையோர காவல்நிலைய போலீசார் அங்கு சென்று கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி சோனை செய்ததில் 2 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. 


Honda CD 110: 10 வருட வாரண்டியுடன் ஹோண்டா சிடி 110 மோட்டார் சைக்கிள்.. குறைந்த விலை, கூடுதல் அம்சங்கள்




அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த  சூழலில் மீண்டும் நேற்றிரவு சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடற்கரையோரம் ஒரு பொட்டலம் கரை ஒதுங்கியதாக காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனை அடுத்து அங்கு விரைந்த கடலோர காவல்படை போலீசார், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில், சம்பவ இடத்திற்கு சென்று அந்த பொட்டலங்களை சோதனை செய்தனர். அப்போது அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதனை கைப்பற்றி காவல்படை போலீசார் காவல் நிலையம் எடுத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Modi Twitter DP: 'எல்லாரும் உங்க டிபி-யில தேசிய கொடி போட்டோ வைங்க..' இந்தியாவுக்கே கோரிக்கை விடுத்த பிரதமர் மோடி..!




தரங்கம்பாடி கடற்கரையை ஒட்டிய கிராமங்களில் அடுத்தடுத்து 4 கிலோ அளவிற்கு கஞ்சா பொட்டலங்கள் கரை ஒதுங்கியதால் யாராவது படகில் கடத்திவந்தபோது வீசி சென்றார்களா? அல்லது படகில் கடத்தி சென்றபோது தவறிவிழுந்து கரை ஒதுங்கியதா என்ற கோணத்தில் கடலோர காவல்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.