தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர் திருச்சி சிவா. தற்போது மாநிலங்களவையின் உறுப்பினராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகன் சூர்யா. இவர் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சூர்யாவை திருச்சி கன்டோன்மெண்ட் போலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த சில தினங்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டையில் சூர்யா காரில் சென்றிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பேருந்து அவர் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த தனியார் பேருந்தை சூர்யா மிரட்டி எடுத்துச் சென்றுவிட்டதாகவும், காருக்கு சேதம் ஏற்பட்டதால் பணத்தை தருமாறு மிரட்டியதாகவும் அந்த பேருந்தின் உரிமையாளர் திருச்சி கன்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.




தனியார் பேருந்து உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று அவரை திருச்சி கன்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். தி.மு.க. எம்.பி.யின் மகனும், பா.ஜ.க. நிர்வாகியுமான சூர்யா கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், டெல்லியில் தி.மு.க.வின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவராகவும் விளங்கும் திருச்சி சிவா மாநிலங்களவை உறுப்பினராக 5 முறை பொறுப்பு வகித்துள்ளார். திருச்சி சிவா தன்னுடைய சாதி மறுப்பு திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கடந்த 2017ம் ஆண்டு அவரது மகன் சூர்யா என்ற மணிவண்ணன் புகார் அளித்திருந்தார்.




இதையடுத்து, சூர்யா தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் தனது நண்பரிடம் தகராறு செய்ததாக சூர்யா மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தி.நகரில் அமைந்துள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க.வில் சூர்யா இணைந்தார்.


தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியது.


மேலும் படிக்க : பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸை அண்ணாமலை சந்தித்தது ஏன்..? பரபரப்பு பின்னணி தகவல்கள்..


மேலும் படிக்க : Uddhav Thackarey : `பதவி விலகத் தயார்!’ : அறிவித்த உத்தவ் தாக்கரே.. என்ன நடக்கிறது மகாராஷ்ட்ராவில்? இதோ டாப் 10 அப்டேட்ஸ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண