திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் கருஞ்சாமி (வயது 63), புளி வியாபாரி. இவர் செங்கூறிச்சையை சேர்ந்த செல்வம் என்பவரிடம் வட்டிக்கு ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு கருஞ்சாமி பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸை அண்ணாமலை சந்தித்தது ஏன்..? பரபரப்பு பின்னணி தகவல்கள்..
இந்த நிலையில், இன்று குரும்பபட்டிக்கு டீ குடிப்பதற்காக கருஞ்சாமி சென்றுள்ளார். அப்போது கடன் கொடுத்தவர் சிலருடன் வந்து கருஞ்சாமியை அழைத்துச்சென்று அங்குள்ள ஒரு கடையில் உட்கார வைத்து பணத்தை திரும்ப கொடுத்து விட்டு செல் என்று மிரட்டியுள்ளனர். அப்போது கருஞ்சாமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனை செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: Viral Video: ஜன்னலோர சீட்டில் ஜாலி பயணம் செய்த ’சூப்பர் மேன்’ கிளி.. வைரலாகும் வீடியோ..
ஆனாலும், அவர்கள் அவரை அங்கிருந்து செல்ல அனுமதிக்க மறுத்து அங்கேயே உட்கார வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கருஞ்சாமி அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனைஅறிந்த கருஞ்சாமியின் உறவினர்கள் குரும்பபட்டியில் குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கருஞ்சாமியை பிடித்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் கருஞ்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திரும்ப கொடுக்காத முதியவரை பிடித்து வைத்திருந்தபோது, அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்