ஆந்திராவில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு  காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் நேற்று நகர் முழுவதும் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் கஞ்சா கடத்தல் கார் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து சந்தேகத்தின்  பேரில் மாவட்டத்தின் உள்ள ஒருசில பகுதியில் சோதனை செய்தனர்.


IRCTC Website Down : முடங்கியது IRCTC இணையதளம்... டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்! காரணம் என்ன?




அப்போது திண்டுக்கல் காந்திஜிரோடு பகுதியில் ஒரு வீட்டில் பண்டல், பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக வீட்டின் உரிமையாளரான அருண்குமார் (வயது 47) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக காரில் 52 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.


மேலும் முன்னாள் போலீஸ்காரரான அருண்குமார், சிதம்பரனார் தெருவை சேர்ந்த சுரேஷ் (42), சேலத்தை சேர்ந்த யோகராஜ் (25) ஆகியோருடன் சேர்ந்து கஞ்சாவை கடத்தி வந்து, மற்றொரு நபருக்கு விற்க வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து 3 பேரையும் தனிப்படை போலீசார் பிடித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


Aavin Price: ஒரு கிலோ பன்னீர் விலை இவ்வளவா..? அதிரடியாக உயர்ந்த ஆவின் பால் பொருட்களின் விலை..!


அதோடு கடத்தி வரப்பட்ட 52 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள், கடத்தல் பயன்படுத்திய கார் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து தெற்கு காவல் நிலைய போலீசார்  வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண