அரூர் பகுதியில் ஆளில்லா வீட்டில் கொள்ளையடிக்கும் பகல் கொள்ளைக்காரனை, அரூர் காவல் துறையினர் கைது செய்து, 17 சவரன் தங்க நகையை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த அ.ஈச்சம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் ஜெயக்குமார்,(47)-செல்வராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு, இந்த தம்பதியினர் இருவரும் தங்களது வீட்டை பூட்டிவிட்டு இருவரும் தனித்தனியாக வேலைக்கு சென்றுள்ளனர். தொடர்ந்து வேலையை முடித்து விட்டு மாலை 5.30 மணிக்கு வீடு திரும்பிய ஜெயக்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் தங்க செயின், 4 பவுன் வளையல், நான்கரை பவுன் ஆரம், ஒன்றரை பவுன் பிரேஸ்லெட் என மொத்தம் 17 பவுன் தங்க நகை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதேப்போல் அதேப்பகுதியில் உள்ள செந்தாமரை வீட்டை பூட்டிவிட்டு, தாயாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் மகள் ஶ்ரீ தேவி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுவதால் அவரும் பள்ளிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை வந்து பார்த்துபோது வீட்டின் பூட்டை, பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்துள்ளது. இதனை தொடர்ந்து பீரோவில் இருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் ரூ.20,000 திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஜெயக்குமார் மற்றும் செந்தாமரை ஆகியோர் அரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்த, காவல் துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவு காட்சிகளை பரிசோதனை செய்தனர். அப்பொழுது ஒருவர் சுற்றி திரிவது கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை வைத்தும், செல்போன் சிக்னலை வைத்து, விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் அடிக்கடி சுற்றி திரிந்த கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து காவேரிப்பட்டினத்தில் இருந்த ராஜ்குமாரை, காவல் துறையினர் கைது செய்து அரூருக்கு அழைத்து வந்தனர். மேலும் விசாரணை நடத்தியதில், அ.ஈச்சம்படி பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளையடித்து தெரியவந்தது. இந்த கொள்ளையன் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களின் வீடுகளை குறி வைத்து, பகல் நேரங்களில் மட்டும் பூட்டிய வீடுகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திருடும் பழக்கம் உள்ளவர். மேலும் விசாரணையில், ஏற்கனவே அரூர் பகுதியில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 10 வழக்குகள் இருந்து வருகிறது. தொடர்ந்து ராஜ்குமாரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 17 பவுன் தங்க நகைகள் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் அலுவலகம் செல்வது போல, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கொள்ளைடித்துக் கொண்டு வீட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.