Crime: உத்தர பிரதேசத்தில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தந்தையே அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

மனைவி, குழந்தைகள் சுத்தியலால் அடித்து கொலை

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாப்பூர் ரே பரேலியைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் அதே பகுதியில் கண் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.  இவர் நோயாளிகளிடம் அன்பாக நடந்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் உள்ளார்.  இந்த தம்பதிக்கு அதிவா (12) என்ற மகளும், ஆரவ் (4) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் ரே பரேலியில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த இரண்டு  நாட்களாக அருண் குமார் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால், அவரது சக ஊழியர்கள் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ஸ்வீட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது ஊழியர்கள், அருண் குமார் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அங்கு, மருத்துவர் அருண் குமார் தூக்கில் தொங்கியப்படி கிடந்துள்ளார். அதே அறையில், அவரது மனைவியும், குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளனர். 

Continues below advertisement

மன உளைச்சலில் கணவன்:

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருண் குமாரின் சக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நான்கு பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக  அருகில் இருகும் மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.  பின்னர், சம்பவ இடத்தில்  சுத்தியல், போதை ஊசி ஆகியவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

அதன்படி, மருத்துவர் அருண் குமார் சில ஆண்டுகளாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவரது செல்போனை ஆய்வு செய்த போது மன உளைச்சலில் இருந்தது உறுதியானது. இந்த மன உளைச்சலில் மனைவி, குழந்தைகளை கொலை செய்ததும் தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று, மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சுயநினைவை இழக்க செய்யும் அளவுக்கு மருந்தை ஊசியால் செலுத்தி, பின்னர்,  சுத்தியலால் அவர்களது தலையில் அடித்து கொன்றிருக்கிறார். பின்னர், அவரும் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


மேலும் படிக்க

"நிறைய குழந்தைய பெத்துக்கோங்க" - கண்களில் கண்ணீர் மல்க அட்வைஸ் கொடுத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

School, Colleges Leave: சென்னை, திருவள்ளூரில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செங்கல்பட்டு, காஞ்சி நிலை என்ன? - முழு விவரம்!