Crime: டெல்லியை அதிரவைத்த சம்பவம்! முன்னாள் மாடல் அழகி கொடூர கொலை - பகீர் பின்னணி!

டெல்லி ஹோட்டலில் முன்னாள் மாடல் அழகி சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

மாடல் அழகி கொடூர கொலை:

டெல்லி அருகே குருகிராம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழகி திவ்யா பஹுஜா (27). இவர் ஜனவரி 1ஆம் தேதி தனது நண்பர் அபிஜித் சிங்குடன்  வெளியே சென்றிருக்கிறார். அதன்பிறகு திவ்யாவை காணவில்லை என்று போலீசாருக்கு புகார் வந்தது.  புகாரின்பேரில் தீவிர விசாரணை கொண்ட போலீசார், திவ்யா தனது நண்பரான அப்ஜித் சிங்குடன் குருகிராமில் உள்ள ஹோட்டலில் இருந்தது தெரியவந்தது.

Continues below advertisement

இதனை அடுத்து, அந்த ஹோட்டலுக்கு சென்ற போலீசார்  அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அப்ஜித் சிங்குடன் சேர்ந்து 2 பேர் உடல் ஒன்றை பெட்சீட்டில் சுற்றி, மேல் மாடியில் இருந்து தரை தளத்திற்கு இழுத்து வந்தது பதிவாகி இருந்தது. அதை தொடர்ந்து, அந்த உடலை அவரது பிஎம்டபிள்யூ காரில் தூக்கிப் போட்டு எடுத்துச் சென்றது சிசிடிவியில் பதிவாகி உள்ளது.  

இதனை அடுத்து, அபிஜித் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.  கொலை செய்யப்பட்டது முன்னாள் மாடல் அழகி திவ்யா என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

நண்பரால் கொலை:

தொடர்ந்து, அபிஜித் சிங்கிடம் நடத்திய விசாரணையில், திவ்யா சுட்டு கொல்லப்பட்டுள்ளார் என்றும் கொலை செய்யப்பட்ட திவ்யாவின் உடலை எடுத்துச் சென்று வீசுவதற்கு இரண்டு பேருக்கு 10 லட்ச ரூபாய் கொடுத்துள்ளதகாவும்  தெரியவந்துள்ளது. ஆனால், எந்த காரணத்திற்கு திவ்யா கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை. அதோடு, திவ்யாவின் உடல் எங்கு வீசப்பட்டது என்று தெரியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”கொலைக்கு பிறகு அபிஜித் மற்றும் அவரது கூட்டாளிகள் தடயங்களை அழிக்க முயன்றுள்ளனர். திவ்யாவின் போன் பல மணி நேரமாக ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் அவரது குடும்பத்தினர் அபிஜித் ஹோட்டலுக்கு சென்று விசாரித்தனர். ஆனால், அங்கிருந்தவர்கள் எதுவும் தெரியாது என்றும்  சிசிடிவி காட்சிகளையும் காட்ட மறுத்துள்ளனர். கொல்லப்பட்ட திவ்யாவின் உடலை தேடி வருகிறோம்" என்று தெரிவித்தனர். 

ஜாமீனில் வெளியே வந்த மாடல் அழகி:

கொலை செய்யப்பட்ட திவ்யா கடந்த 7 ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் தான் அவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் சந்தீப்பின் காதலியாவார். கேங்ஸ்டர் சந்தீப் 2016ல் மும்பை ஹோட்டலில் காதலி திவ்யாவுடன் தங்கி இருந்தபோது, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இருப்பினும், போலி என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக பல போலீஸ் அதிகாரிகள் கைதாகினர். அதோடு, சந்தீப் கொலைக்கு உதவியதாக திவ்யாவும் கைது செய்யப்பட்டு 7 ஆண்டு சிறையில் இருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜாமீனில் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola