டெல்லியுள்ள பிவிஆர் சினிமா தியேட்டர் ஒன்றில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு டெல்லியின் விகாஷ்பூரியில் பிவிஆர் சினிமா தியேட்டர் அமைந்துள்ளது. அங்கு வழக்கம் போல் இன்று சினிமா காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. அப்போது ஒருவர் கழிவறையில் சடலமாக கிடப்பது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது அங்கு ஒரு ஆதார் அட்டை கிடைத்துள்ளது. அந்த ஆதார் அட்டையை வைத்து அந்த நபருக்கு 44 வயது என்பது தெரியவந்துள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான காரணம் என்ன வென்று தெரியவில்லை.
மேலும் படிக்க:சீரியல் நடிகரை பிடிச்சிருக்கு.. காதலி மீது சந்தேகம்.. முன்னாள் காதலன் செய்த பயங்கரம்..
மேலும் அந்த நபர் கூர்மையான ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தியேட்டரிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அத்துடன் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.
சினிமா தியேட்டரின் கழிவறையில் ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தியேட்டரில் காட்சிகள் பார்க்க வரும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த நபருக்கு குடும்ப பிரச்னை அல்லது கடன் தொல்லை உள்ளாதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முடக்கி விட்டுள்ளதாக தெரிகிறது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்