மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது குழந்தைகள் மற்றும் மாமியாரின் முன்பாகவே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வு, அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சடர்புர் என்ற மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஒரு கர்ப்பிணி பெண். அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோர் கடத்தப்பட்டு, அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த அந்த பெண்னின் கணவர் அவர் வேலை பார்க்கும் பண்ணை ஒன்றில் மரத்தை வெட்ட மறுத்ததால் அந்த பண்ணையின் முதலாளி இவ்வாறு செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.






பங்கஜ் ஷர்மா என்ற அந்த முதலாளி, 32 வயது மதிக்கத்தக்க தனது வேலையாள் ஒருவரை பண்ணையில் உள்ள மரத்தை வெட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அவரோ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அதை மறுத்துள்ளார். இந்நிலையில் கோபமடைந்த ஷர்மா அவரை அடித்து துன்புறுத்த, அவ்விடத்தில் இருந்து அந்த வேலையாள் தப்பியோடியுள்ளார். அதன் பிறகு வேலையாள் வீட்டிற்கு சென்ற பங்கஜ் ஷர்மா, வீட்டில் இருந்த அவரது கர்ப்பிணி மனைவியை அடித்து துன்புறுத்தி அதன் பிறகு கடத்திச்சென்றுள்ளார்.   




இந்நிலையில் கடத்தப்பட்ட அந்த நால்வரும் கடந்த வியாழன்று மீட்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் போலீசாருக்கு அளித்த ரகசிய தகவலின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டதோடு அந்த தாதாவும் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருவர் தப்பிவிட்டதாகவும் போலீசார் அவர்களை தேடிவருவதாகவும் அந்த மாவட்ட போலீஸ் அதிகாரி சச்சின் சர்மா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.  


பாலியல் ஆசிரியர் ராஜகோபாலனின் கூடுதல் ஆதாரங்கள்; சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பேட்டி!


கடந்த வியாழன்று செய்தியாளர்களை சந்தித்த அப்பெண், பண்ணையின் சொந்தக்காரரான அந்த தாதா தன்னை தனது குழந்தைகள் முன்பாக பாலியல் வன்கொடுமை செய்ததாகவும். ஆனால் முதல் தகவல் அறிக்கையில் இந்த தகவலை போலீசார் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். அந்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர் மீதும், காயம் ஏற்படுத்துதல், கடத்தல், ஆபாசமாக பேசுதல் மற்றும் எஸ்.சி, எஸ்.டி பாதுகாப்பு சட்டத்தில் கீழ் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




இந்நிலையில் அம்மாவட்ட அதிகாரி, ஊடகத்தின் முன் அந்த பெண் கூறிய தகவல்களின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், ஆனால் முதலில் அந்த பெண் தான் தாக்கப்பட்டதை மட்டுமே போலீசிடம் தெரிவித்ததாகவும், தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து அவர் போலீசிடம் தெரிவிக்கவில்லை என்றும் சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாலியல் வன்கொடுமை தொடர்பான சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.