நாட்டில் கெடுவாய்ப்பாக பட்டியலின, சிறுபான்மையின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு எதிராக அரங்கேறும் கொடூர சம்பவங்கள் கவலையளிக்கும் விதத்திலே உள்ளது. தற்போது அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆபாச பாடல்:
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பதல்கஞ்ச். இந்த காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது ருடாவ்லி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ் கிஷோர். இவருக்கு வயது 45. பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபர் சுனில்யாதவ்.
சுனில் யாதவ் அந்த பகுதியில் சிறு, சிறு தகராறில் அவ்வப்போது ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோதமாக சுரங்க வேலையிலும் ஈடுபடுவதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று சுனில் யாதவ் கிஷோர் வீட்டு அருகே தனது டிராக்டரில் சென்றுள்ளார். அங்கு தனது டிராக்டரை நிறுத்திவிட்டு டிராக்டரில் உள்ள ஸ்பீக்கர் மூலமாக ஆபாச பாடல்களை ஒலிக்கவிட்டுள்ளார்.
சுட்டுக்கொலை:
அந்த ஆபாச பாடல்களை மிக சத்தமாக சுனில்யாதவ் ஒலிக்கவிட்டதால் கிஷோர்குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து, கிஷோர்குமார் சுனில்யாதவிடம் சென்று ஆபாச பாடலை நிறுத்துமாறு கூறியுள்ளார். தன்னை பாடலை நிறுத்துமாறு கிஷோர்குமார் கூறியதால் ஆத்திரமடைந்த சுனில்யாதவ், உடனே 10க்கும் மேற்பட்டோரை அழைத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த அந்த கும்பல் சுனில் யாதவுடன் இணைந்து கிஷோர்குமாரையும், அவரது குடும்பத்தினரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. அப்போது, சுனில் யாதவ் தன்னை பாடலை நிறுத்துமாறு கூறிய சுனில்யாதவை ஆத்திரத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதில் கிஷோர்குமார் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
மாயாவதி கண்டனம்:
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறியந்த போலீசார் சுனில்யாதவ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுனில் யாதவ் உள்பட குற்றவாளிகள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பகுஜன்சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகளின் மன உறுதி எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம் இது. சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு தலித் குடும்பத்தை தாக்கி, ஒருவரை கொலை செய்துள்ளது. இது மிகவும் வேதனையானது மற்றும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Cyber crime: டாஸ்கை முடிக்க சொல்லி டாட்டா காண்பித்த ஆன்லைன் மோசடி கும்பல் - ரூ. 3 லட்சத்தை இழந்த இன்ஜினியர்
மேலும் படிக்க: Crime: நெல்லை அருகே வாலிபர் கொலையில் 3 பேர் கைது; ஜாதிய படுகொலையா...? - போலீஸ் விளக்கம்