புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம் என்று சொன்னதை நம்பி 11 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார்.


புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த  பட்டதாரி வாலிபர் ஒருவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட நபர், தான் அமேசான் நிறுவனத்தின் ஹெச்.ஆர் மேனேஜராக இருக்கிறேன். நீங்கள் விருப்பம் இருந்தால் இணைய வழியில் முதலீடு செய்து அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பி  இணைய வழி மோசடிக்காரர்கள் சொன்ன பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி எந்த வருமானமும் அவருக்கு வராமல் இருந்ததனால் , முன்பு தொடர்பு கொண்ட நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. பின்னர் தான் ஏமாந்ததை உணர்ந்த அவர் இணைய வழி காவல் நிலையத்தில் 11 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் இணைய மோசடிக்காரர்களால் ஏமாற்றப்பட்டது தொடர்பாக அளித்த புகார் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.


இணைய வழியில் வருகின்ற எந்த விளம்பரங்களை நம்பியும் பணம் செலுத்துவதோ, முதலீடு செய்வதோ, பொருட்களை வாங்குவதோ, வேலை வாய்ப்பிற்கு பணம் செலுத்துவதோ அல்லது அவர்கள் கேட்கின்ற கட்டணங்களை செலுத்துவதோ இவை அனைத்துமே இணைய வழி மோசடிக்காரர்களால் மோசடி செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட வழிகளாகும். ஆகவே இணைய வழியில் பணத்தை செலுத்தும் போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இணை போலீசார் பொதுமக்களை தெரிவித்தனர்.


புதுச்சேரி இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு


பொதுமக்களுக்கு உடனடி லோன் ஆப் இன்ஸ்டன்ட் லோன் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவிப்பது என்னவென்றால், இதுபோன்ற உடனடி மொபைல் ஆப்பிள் எந்த ஒரு வெரிஃபிகேஷனும் செய்யாமல் கொடுக்கப்படுகின்ற லோன்களில் 99% பயனாளிகள் இது போலவே மிரட்டப்படுகின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என கட்டி தங்களுடைய மன நிம்மதியையும் பொதுமக்கள் இழக்கின்றனர். மேலும் இணைய வழி மோசடிக்காரர்கள் லோன் வாங்கியவர்களை அச்சுறுத்த அவர்கள் படங்களை மார்பிங் செய்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை மிரட்டுகின்றனர்.



பொதுமக்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத இது போன்ற லோன் ஆப்புகளில் உடனடி கடனை வாங்கி இதுபோன்று பணத்தையும் மானத்தையும் இழக்க வேண்டாம் என இணைய வழி காவல்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் உடனடி லோன் ஆப்பிள் நாம் கேட்கின்ற தொகையை அவர்கள் கொடுப்பதில்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் என்று வசூலிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் இது போன்ற உடனடி லோன் ஆப்பில் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் இது சம்பந்தமான புகார் ஏதேனும் இருந்தால் 1930 விற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.