புதுச்சேரி : இணைய வழியில் அறிமுகமாகி அமெரிக்க டாலரை மார்க்கெட் மதிப்பை விட குறைவாக தருகிறேன் என்று கூறியதை நம்பி 21,50,000/-ரூபாய் பணத்தை இழந்த புதுச்சேரி தொழிலதிபர்.
தொழிலதிபர்:
புதுச்சேரி ஆனந்த ரங்கபிள்ளை நகரை சேர்ந்த ஜெயரட்சகன் (வயது 46 ) என்பவர் இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தில் பணி செய்துவிட்டு தற்போது புதுச்சேரியில் தங்கி ஆன்லைனில் முதலீடு செய்து வருகிறார். அவர் கடந்த மாதம் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக பினான்ஸ் என்ற நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது வாட்ஸப்பில் வந்த நபர் நான் தென்னிந்தியாவிற்கான பினான்ஸ் கம்பெனியின் நிர்வாகி உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என்று வாட்ஸ் அப் காலில் பேசவே அதை நம்பிய ஜெயரட்சகன் பத்தாயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.
21 லட்சம் அபேஸ்:
அப்போதைய மார்க்கெட் ஒரு டாலரின் மதிப்பு 88 ரூபாய் என்று இருந்த போது மேற்படி தொடர்பு கொண்ட மர்ம நபர் 85 தருகிறேன் என்று கூறியது நம்பி மேலும் பினான்ஸ் நிறுவனத்தை பற்றி பல்வேறு தகவல்களையும் கூறவே அதை நம்பிய ஜெயரட்சகன் பல்வேறு தவணைகளாக மொத்தம் 21 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர் சொன்ன 4 வங்கி கணக்குகளுக்கு அனுப்பி விட்டார் பணத்தை அனுப்பி ஒரு மாதமாகியும் புகார் தாரரான ஜெயரட்சகனுக்கு எந்த அமெரிக்க டாலரும் வந்து சேராதால் ஏமாந்ததை உணர்ந்த அவர் என்று இணைய வழி காவலில் வந்து புகார் கொடுத்தார் அது சம்பந்தமாக காவல் ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
புதுச்சேரி இணைய வழி காவல்துறை விழிப்புணர்வு
பொதுமக்களுக்கு உடனடி லோன் ஆப் இன்ஸ்டன்ட் லோன் ஆப் சம்பந்தமாக புதுச்சேரி இணைய வழி காவல்துறை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தெரிவிப்பது என்னவென்றால், இதுபோன்ற உடனடி மொபைல் ஆப்பிள் எந்த ஒரு வெரிஃபிகேஷனும் செய்யாமல் கொடுக்கப்படுகின்ற லோன்களில் 99% பயனாளிகள் இது போலவே மிரட்டப்படுகின்றனர். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என கட்டி தங்களுடைய மன நிம்மதியையும் பொதுமக்கள் இழக்கின்றனர். மேலும் இணைய வழி மோசடிக்காரர்கள் லோன் வாங்கியவர்களை அச்சுறுத்த அவர்கள் படங்களை மார்பிங் செய்து அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்பி அவர்களை மிரட்டுகின்றனர்.
பொதுமக்கள் குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாத இது போன்ற லோன் ஆப்புகளில் உடனடி கடனை வாங்கி இதுபோன்று பணத்தையும் மானத்தையும் இழக்க வேண்டாம் என இணைய வழி காவல்துறை தங்களுக்கு எச்சரிக்கை செய்கிறது. மேலும் உடனடி லோன் ஆப்பிள் நாம் கேட்கின்ற தொகையை அவர்கள் கொடுப்பதில்லை ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு முப்பதாயிரம் ரூபாய் உங்களுக்கு கொடுத்தோம் என்று வசூலிக்க ஆரம்பிக்கின்றனர். அதனால் பொதுமக்கள் இது போன்ற உடனடி லோன் ஆப்பில் இருந்து கடன் பெற வேண்டாம் என்றும் இது சம்பந்தமான புகார் ஏதேனும் இருந்தால் 1930 விற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.