Crime : முதலிரவில் காதலனுடன் வீடியோ கால்.. கணவனுக்கு கூல் டிரிங்க்ஸ்சில் விஷம்.. மனைவி செய்த காரியம்

Crime :கலையரசன் என்பவருக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம், நடைபெற்றுள்ளது.

Continues below advertisement

திருமணமான 25வது நாளில் கணவருக்கு கூல்டிரிங்ஸ்-ல் மனைவி விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

கடலூர் மாவட்டட்த்தில் சுந்தரமூர்த்தியின் மகன் கலையரசன் என்பவருக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஷாலினி என்ற பெண்ணுடன் பெரியோர்கள் சம்மதத்துடன் திருமணம், நடைபெற்றுள்ளது.

ஆனால் பெண் ஷாலினிக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், பெற்றோரின் வற்புறுத்தலால் தான் திருமணத்திற்கு ஒப்புகொண்டதாக தெரிகிறது. மேலும் அவர் வேறு ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் முடிந்து முதல் இரவின் போது வீடியோ காலில் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: Neet Exam : திண்டிவனம் அருகே சோகம்... நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை?

இதனால் கலையரசன் ஷாலினியை அவர்களின் வீட்டிற்கு அனுப்பி விட மீண்டும் அந்த பெண்ணின் சொந்தக்காரர்கள் எல்லாம் சில நாட்களில் சரியாக விடும் என்று கூறி விட்டு விட்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி ஷாலினி ;கலையரசனுக்கு கூல்ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு தற்போது கலையரசன் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கடலூர் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஷாலினி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலையரசனின் பெற்றோர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

இதையும் படிங்க: Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”

திருமணம் ஆகி ஒரு மாதத்திற்கு உள்ளாக கணவனுக்கு கூல்டிரிங்ஸ் -ல் விஷம் கொடுத்த மனைவியின் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola