கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே கிராமத்தை ஒட்டிய பகுதியில் சிறுமி ஆடு, மாடுகள் மேய்த்து கொண்டு இருந்து உள்ளார், அப்பொழுது அந்த சிறுமிக்கு திடீரென தண்ணீர் தாகம் எடுத்து உள்ளது. இதனை அடுத்து அருகில் உள்ள ஆக்கனூர் ஏரிக்கரை ஓரமாக உள்ள செல்வராசு (52) என்பவர் வீட்டிற்கு சென்று சிறுமி குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளார். அப்போது செல்வராசு தண்ணீர் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்குள் அழைத்து அன்பாய் பேசிக்கொண்டு இருந்து உள்ளார். 

 

பின்னர் பேசிக்கொண்டு இருந்த அவர் திடீரென வலு கட்டாயமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுமி கூச்சல் போடவே, பயந்த செல்வராசு அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சிறுமி வீட்டிற்கு சென்றதும் பெற்றோர்களிடம் கூறி உள்ளார், இதனால் தகவல் அறிந்து சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் பேரில் காவல் துறையினர் விசாரணை செய்தனர்.

 



 

அப்போது விசாரணையில் சிறுமியை செல்வராசு பாலியில் வன்கொடுமை செய்தது உண்மை என தெரிய வந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து ராமநத்தம் காவல் துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து செல்வராசுவை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் தண்ணீர் கேட்க சென்ற 16 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்த, சம்பவம் ராமநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த நிலையில் கடலூரில் நேற்று காதலன் கண் முன்னே காதலியை மூன்று நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் மறைவதற்குள் இதே கடலூர் மாவட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து இது போன்ற பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளை உடனடியாக கைது அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையினர் விரைந்து செயல் பட வேண்டும் அல்லது இது போன்ற சம்பங்கள் குறித்து தகவல் தெரிவிக்க உதவும் வகையில் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை வைத்து உள்ளனர்.