கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பங்காரம் கிராமத்தை சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுக்கு தாமோதரன் என்கின்ற ரவிக்குமார் (வயது 25) இன்ஜினியர் பட்டதாரி என்பவருடன் முகநூல் மூலமாக அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் நண்பர்கள் ஆன பின்னர் செல் நம்பரை பகிர்ந்து கொண்டு நட்பாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் தாமோதரன் கூறியுள்ளார். உன்னுடைய அழகான புகைப்படங்களை அனுப்புங்கள் இயக்குனரிடம் காட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.


அந்த இளம்பெண் தன்னிடம் போட்டோ எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தாமோதரன் எனக்கு போட்டோகிராபி தெரியும் என்றும் நான் நேரில் வந்து உன்னை அழகாக படம் பிடித்து இயக்குனருக்கு அனுப்பி வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்த அந்தப் பெண்ணிடம் வீட்டின் முகவரியை கேட்டறிந்தார். கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி அன்று மதியம் 12.30 மணியளவில் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து உன் வீட்டருகே அருகே தான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


பின்னர் அந்தப் பெண் தாமோதரனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்பெண்ணிடம் போட்டோ எடுக்க வேண்டும் உன்னிடம் இருக்கும் உடையிலே அழகான உடையை உடுத்திக் கொண்டுவா என்று கூறியுள்ளார். அந்தப் பெண்ணும் சினிமா ஆசை உச்சத்திற்கு செல்ல போட்டிருந்த நகைகள் எல்லாம் கழட்டி வைத்து விட்டு அறையினுள் சென்றார். இதனை எதிர்பார்த்திருந்த தாமோதரன் நகைகள் மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுள்ளார். துணி மாற்றிக் கொண்ட இளம்பெண் வெளியில் வந்து பார்த்த பொழுது நகை, செல்போனை காணவில்லை.


அங்கிருந்த தாமோதரனையும் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் சின்னசேலம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த போலீ சார் சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராசு தலைமையில் தனிப்படை அமைத்து தாமோதரனை தேடிவந்தனர். இந்நிலையில் செல்போன் நம்பரை வைத்து தாமோதரன் காரைக்குடியில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். காரைக்குடிக்கு விரைந்த சின்னசேலம் போலீசார் தாமோதரனை மடக்கிப் பிடித்தனர். சின்னசேலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சின்னசேலம் சிறையில் அடைத்தனர்.




உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?


என்ன செய்ய வேண்டும்?


நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.