காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு மேலும் குறைந்துள்ளது. கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 11ஆயிரத்து, 630 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 10 ஆயிரத்து 610 கனஅடியாக நீர்வரத்து மேலும் குறைந்தது. ஆற்றில் இருந்து 9 ஆயிரத்து, 340 கனஅடி தண்ணீரும் நான்கு பாசன வாய்க்கால்களில் 820 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


 




 


அமராவதி அணை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை நிலவரப்படி வினாடிக்கு 513 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு 83 கனஅடியும் புதிய பாசன வாய்க்கால்களில் 275 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 89.31 அடியாக இருந்தது. ஆற்றுப்பகுதிகளில் மழை காரணமாக கரூர் அருகே பெரிய ஆண்டாள் கோவில் தடுப்பணைக்கு காலை 6 மணி நிலவரப்படி 1057 கன அடி தண்ணீர் வந்தது.


 


 




ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு கன அடி வீதம் தண்ணீர் வந்தது 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 25.61 அடியாக குறைந்தது. நொய்யல் பாசன வாய்க்கால்களில் வினாடிக்கு 51 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.


நங்காஞ்சி அணை திண்டுக்கல் மாவட்டம் வடகாடு மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணை நிரம்பி உள்ளது. இதனால் நங்காஞ்சி ஆற்றில் இருந்து இரண்டு பாசன கிளை வாய்க்கால்களில் தலா 10 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் வந்தது. பொன்னணி ஆறு அணை கடவூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணைக்கு காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 51 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 28.13 அடியாக இருந்தது. அணைப்பகுதிகளில் ஒரு மில்லி மீட்டர் மழை பெய்தது.


 


 




 


கரூர் மாவட்டத்தில் சில நாட்களாக மழையின் அளவு பூஜ்ஜியத்தில் உள்ளது மேலும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் பல்வேறு அணைக்கு வரும் நீர்வரத்துக்கள் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. பாசன விவசாயிகள் தற்போது உள்ள தண்ணீரில் தங்களது விவசாயிகள் செய்து வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறைக்கு அலைந்து தண்ணீர் திறக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.