தன்பாலின உறவுக்கு மறுத்த இளைஞர்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (27). இவர் சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர் தீபாவளி பண்டிகைக்காக தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு சென்றிருக்கிறார். இதனை அடுத்து 13ஆம் தேதி சிதம்பரத்தில் உள்ள தனது நண்பரை பார்த்துவிட்டு சென்னைக்கு திரும்புவதாக வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார்.
இதற்கிடையில், அசோக்ராஜன் ஊருக்கு வரும்போது சோழபுரம் பகுதியைச் சேர்ந்த சித்த வைத்தியர் கேசவமூர்த்தி (47) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும், அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று கேசவமூர்த்தியிடம் அழுதிருக்கிறார். இதனால், கேசரமூர்த்தி, தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்ல அறிவுறுத்தினார். அப்போது, இருவரும் தன்பாலினச் சேர்க்கை உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, கடந்த 13ஆம் தேதி வீட்டிற்கு வந்த அசோக்ராஜனை, கேசவமூர்த்தி அழைத்திருக்கிறார். ஆனால், அசோக்ராஜன் வர மறுத்தால், அவருக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்திருக்கிறார் கேசவமூர்த்தி. அந்த மருந்தை சாப்பிட்ட அசோக்ராஜனுக்கு, பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிரிழந்தார்.
துண்டு துண்டாக வெட்டப்பட்ட கொடூரம்
இதனை அடுத்து, கேசவமூர்த்தி, அசோகராஜனின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்திருக்கிறார். இதற்கிடையில், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த தனது பேரன் சென்னை சென்றாரா? என்பதற்காக அவரது பாட்டி அசோக்ராஜனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அசோக்ராஜனின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அவரது பாட்டி, சோழபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அசோக்ராஜன் சோழபுரம் சென்றது தெரியவந்தது. சந்தேகத்தின் அடிப்படையில், சேசவமூர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜனும், கேசவமூர்த்தியும் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், கேசவமூர்த்தி அசோக்ராஜனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கேசவமூர்த்தி வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டிருந்த அசோக்ராஜன் உடலை தோண்டி எடுத்தனர். உடல் அழுகி இருந்ததால் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் அசோக் ராஜனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க
Crime: உறவை முறித்துக் கொண்ட ஆத்திரம்...இளம்பெண்ணை கழுத்து அறுத்து கொன்ற காதலன் - ஷாக்!