Crime: கர்நாடகாவில் உறவை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் இளம்பெண், கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.


உறவை முறித்துக் கொண்டதால் ஆத்திரம்


கர்நாடகா மாநிலம் ஹசான் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேஜாஸ் (23).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணும், தேஜாஸ் என்பவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.  அந்த பெண் தற்போது எம்எஸ்சி இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்  ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். அப்போது, இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.


அந்த பெண்ணின் கடந்த கால உறவை பற்றி தேஜாஸ் சண்டை போட்டு வந்துள்ளார். கடந்த கால உறவை மறைத்ததாக கூறி, சண்டை போட்டுள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு சென்ற அந்த பெண், தேஜாஸ் உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தார். அதன்படி, தேஜாஸிடமும் தெரிவித்தார். இதற்கு தேஜாஸ் மறுப்பு தெரிவித்து இதற்கு சண்டை போட்டுள்ளதாக தெரிகிறது. 


கழுத்து அறுத்த கொன்ற கொடூரம்


இதனை அடுத்து, சம்பவத்தன்று, கடந்த வியாழக்கிழமை பிரச்சினைகளை பற்றி பேசுவதற்காக இருசக்கர வாகனத்தில் அந்த பெண்ணை அழைத்து கொண்டு 13 கி.மீ தொலைவில் உள்ள குத்திபெட்டா என்ற மலைப்பகுதிக்கு  சென்றிருக்கிறார். அப்போதும், இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து, இளம்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் தேஜாஸ். பின்னர், அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். 


இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், போலீசார் தேஜாஸை கைது செய்தனர். உறவை முறித்துக் கொண்ட ஆத்திரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது




மேலும் படிக்க


IND vs AUS Final: ஏன்ப்பா இப்படி! 2023ம் ஆண்டில் மட்டும் இரண்டு முறை.. ஐசிசி பட்டத்தை இந்தியாவிடம் பறித்த டிராவிஸ் ஹெட்..!


.