Crime : உத்தர பிரதேசத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன் தொடர்ச்சியாக, உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள தனியார் கம்பெணியில் 23 வயதான இளம்பெண் ஒருவர் வேலை செய்து வந்தார். ஒரு நாள் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல வாடகை டாக்சியில் ஏறினார். யமுனா விரைவுச்சாலை நோக்கி டாக்சி சென்ற கொண்டிருந்தபோது இளம்பெண்ணை தவிர மற்ற பயணிகள் அனைவரையும் அந்த கார் ஓட்டுநர் குபேர்பூர் என்ற பகுதியில் இறக்கிவிட்டார். தனியாக இருந்த இளம்பெண்ணை எட்மத்பூர் என்ற இடத்தில் இறக்கிவிடுவதாக கார் ஓட்டுநர் கூறினார்.
இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
பின்னர் தனது 2 நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு வரவழைத்தார். கார் ஓட்டுநரின் நண்பர்கள் 2 பேரும் குபேர்பூர் பகுதியில் ஏறிக் கொண்டனர். பின்னர், அந்த 3 பேரும் சேர்ந்து அப்பெண்ணை அருகில் உள்ள வயல்வெளிக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நடந்த சம்பவம் குறித்து அந்த பெண், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான கார் ஓட்டுநர், அவரது நண்பர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.
அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் :
முன்னதாக, உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் சில நாட்களுக்கு முன்பு 18 வயது இளம்பெண்ணை ஆட்டோ ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்திற்கு பின்னர், நகரின் மத்திய பகுதியில் உள்ள சாலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆட்டோவில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கை உறுதி செய்கிறது. குறிப்பாக, இதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்படுவதில் நாட்டிலேயே முதல் இடத்தில் டெல்லி உள்ளது. டெல்லியை அடுத்து மும்பையில் 5,543 குற்ற வழக்குகளும் பெங்களூருவில் 3,127 வழக்குகளும் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Crime : நடுரோட்டில் பிரபல நடிகை சுட்டுக்கொலை...வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்...என்ன நடந்தது?