Crime : உடலுறவுக்கு ’நோ’ சொன்ன பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்.. தொடரும் கொடூர வன்முறை

உத்தர பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Crime : உத்தர பிரதேசத்தில் உடலுறவுக்கு மறுத்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

உத்தர பிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது அன்வர். இவருக்கு ருக் ஷர் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகுகிறது. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். முகமது அன்வர் அம்ரொஹா  மாவட்டத்தில் உள்ள ஒரு பேக்கரி கடை நடத்தி வருகிறார். தினமும் வேலைக்கு சென்று  இரவு 8 மணிக்கு தான் வீடு திரும்புவதாக கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அன்று இரவு அன்வர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். அப்போது, தனது மனைவி ருக்ஷருடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். இதன்பின்னர் இருவரும் தூங்க சென்றுவிட்டனர்.  பின்பு சிறிது நேரம் கழித்து கண் விழித்த அன்வர், மனைவியை மீண்டும் பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். இதற்கு ருக் ஷர் மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அன்வர், ருக் ஷரை கடுமையாக பேசியுள்ளார். பின்பு இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து கடும் கோபமடைந்த அன்வர், தனது மனைவியை கயிற்றால் கழுத்தை நெரிந்து கொலை செய்துள்ளார். கொலை செய்ததை மறைப்பதற்காக முடிவு செய்த அன்வர், தனது மனைவியின் தலைமுடியை வெட்டியுள்ளார். பின்பு, அவரது உடலை பிளாஸ்டிக் கவரில் சுற்றில் அதிகாலையில்  தனது ஊரில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஒரு பகுதியில் வீசிவுள்ளார். ருக் ஷரின் உடலை அப்புறப்படுத்த,  அன்வரின் சகோதரன் டேனிஷ் என்பவரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதை அடுத்து, உறவினர்களிடம் மனைவி காணவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தன் மேல் சந்தேகம் வராமல் இருக்க மனைவி காணவில்லை என அம்ரொஹா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரை அடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்தனர். அப்போது அன்வர் மற்றும் அவரின் உறவினர்களிடமும் விசாரணை செய்தனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக அன்வர் பதிலளித்துள்ளார். 
இதற்கிடையே அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அன்வரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அன்வர் உண்மையை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் மனைவியை கொலை செய்த அன்வர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சகோதரர் டேனிஷ் ஆகிய இருவரையும்  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் படிக்க

Crime: கணவரை கொல்ல திட்டம்.. ஸ்லோ பாய்சன் கொடுத்து மாமியருக்கு டெஸ்டிங்.. மனைவி போட்ட பகீர் திட்டம்!

Crime : ”போலீஸ்தான் என்னை மிரட்டி சொல்ல வச்சாங்க”... காதலன் கொலை வழக்கில் பல்டி அடித்த காதலி!

Continues below advertisement
Sponsored Links by Taboola