ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் காதல் விவகாரத்தில், பல் மருத்துவம் படிக்கும் மாணவியை ஒருவர் கத்தியால் கழுத்தை  அறுத்து கொலை செய்துள்ளார்.

ஆந்திரா மாநிலம்  விஜயவாடாவில் தபஸ்வி (20) என்ற மாணவி பிடிஎஸ் படித்து வருகிறார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஊடகங்களில் ஞானேஸ்வரர் என்பவருடன் நட்புடன் பழங்கி வந்தார். இவர்களது நட்பு காதலாக மாறிய நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாணவி, ஞானேஸ்வரருடன் பேசுவதை நிறுத்தி விட்டார். ஆனால் மாணவியிடம், தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு, ஞானேஸ்வரர் மீது விஜயவாடா காவல்நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரை அடுத்து, ஞானேஸ்வரருக்கு கவுன்சிலங் கொடுத்து எச்சரித்து அனுப்பினர். இதனை தொடர்ந்து, குண்டூர் அருகே உள்ள தக்கெல்லபாடு என்ற இடத்தில் தனது தோழியுடன் ஒரு வாரத்துக்கும் மேலாக மாணவி தங்கியிருந்தார். அந்த மாணவி இருக்கும் இடத்தை அறிந்த ஞானேஸ்வர், நேற்று இரவு தக்கெல்லபாடு பகுதிக்கு சென்று அந்த மாணவியிடம் பேச முயன்றார்.  அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் நீடித்த நிலையில், ஞானேஸ்வரர் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தை அறுத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஞானேஸ்வரரை தாக்க முயன்றனர். அப்போது, அவர் தனது கையை கத்தியால் வெட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து அவரை கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னதாக,  டெல்லியில் அரங்கேறிய கொலை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. தன்னுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண்ணை அவரது காதலனே கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார் என்பது நாட்டையே அசைத்தது.

மேலும் படிக்க

Crime : வீட்டிற்கு வராதே எனக் கூறியதால் ஆத்திரம்... பட்டப்பகலில் பெண்ணை கண்ட துண்டமாக வெட்டிய நபர்...

சூது கவ்வும்... லூடோவுக்கு அடிமை: வீட்டு உரிமையாளரிடம் தன்னையே அடகு வைத்து விளையாடிய பெண்!